மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“வைரல் ஜோதிடர் என்ற பட்டப் பெயரோடு இப்போது பிரபலமாகியிருக்கும் பாலாஜி ஹாசனால் ரஜினி மக்கள் மன்றத்தினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய அளவில் அவர் சாதிக்கமாட்டார் என்று பாலாஜி ஹாசன் சொன்னதுதான் இதற்குக் காரணம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும்தான் போட்டி இருக்கும் என்று ரஜினியின் ஆதரவாளர்கள் பல நாட்களாக சொல்லி வருகிறார்கள். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்கு உள்ளான கராத்தே தியாகராஜன் கூட பேட்டிகளில் இதைத்தான் அழுத்தம் திருத்தமாக சொன்னார். எடப்பாடி ஆட்சி முடிந்த அடுத்த நிமிடமே ரஜினி கட்சியை அறிவிப்பார் என்று தமிழருவி மணியனும் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசியில் மிஞ்சும் நான்கு அணிகள், இறுதிப்போட்டிக்கு வரும் அணிகள் பற்றியெல்லாம் பாலாஜி ஹாசன் ஏற்கனவே சொன்னது போலவே நடந்தது. எனவே ஒரே நாளில் அவர் சமூக தளங்களில் புகழ் பெற்றுவிட்டார். அதைவிட சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவரை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார். உலகக் கோப்பை கணிப்புக்குப் பின்னே பரபரப்பாக பேசப்பட்ட ஜோதிடர் பாலாஜி ஹாசன் அதற்கு முன்பே ஸ்டாலின் வீட்டுக்கு நன்கு அறிமுகமானவர்தான். துர்கா ஸ்டாலின், உதயநிதி ஆகியோருக்கு அவர்தான் ஜோதிடம் பார்த்து வந்தார் என்கிறார்கள்.
ஸ்டாலின் மனைவியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு ரஜினி பற்றி ஜோதிடர் பாலாஜி ஹாசன் வெளியிட்ட கருத்துகள்தான் ரஜினி மன்றத்தினரை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. ரஜினிகாந்த் பற்றி ஜோதிடர் பாலாஜி ஹாசன், ’2017 டிசம்பரில் அரசியல் அறிவிப்பு வெளியிட்டார் ரஜினிகாந்த். ஆனால், இதுவரை எதுவும் ஆக்கப்பூர்வமாக செய்யவில்லை. 2021ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தொடங்குவார். ஆனால், மக்களிடம் பெரிய ஆதரவு ஒன்றும் இருக்காது. அதன் பிறகு 2024ல் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் வரக்கூடும். இதையடுத்து, அவரது உடல்நலனில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை பொறுத்துத்தான் அவரது அரசியல் பிரவேசம் இருக்கும்’ என்று சொல்லியிருந்தார்.
இதைப் பார்த்த ரஜினி மன்றத்தினர் பலர், ‘ஸ்டாலினுக்கு போட்டியாக ரஜினிதான் வருவார் என்று தெரிந்துகொண்டு ஸ்டாலின் மனைவி துர்கா பேச்சைக் கேட்டுக் கொண்டு ரஜினிக்கு எதிராக தன் தொழிலை பயன்படுத்தியிருக்கிறார் ஜோதிடர். இதன் மூலம் ரஜினியைப் பார்த்து ஸ்டாலின் குடும்பம் பயப்படுகிறதா?’ என்றெல்லாம் சமூக தளங்களில் கொதித்துவிட்டனர் ரஜினி மன்றத்தினர். மேலும் ஜோதிடர் பாலாஜி ஹாசனுக்கும் போன் செய்து கடுமையான வார்த்தைகளில் தாக்க அவர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்.
இந்த நிலையில் துர்கா ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசிய பாலாஜி ஹாசன், ரஜினி மன்றத்தினர் எதிர்ப்பு பற்றி தெரிவித்தாராம். அதற்கெல்லாம் கவலைப்படாதீங்க என்று சொன்னாராம் துர்கா. ஆனாலும் ரஜினி மன்றத்தினர் எதிர்ப்பு அதிகமானதால் தன் தரப்பு விளக்கம் ஒன்றை தன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார் ஜோதிடர்.
’உண்மையாக ரஜினியின் உடல் நலத்தில் ஒரு சிறு பின்னடைவு ஏற்பட்டு ஒரு சில நாட்கள் அவதிப்படுவார். அதற்கு பிறகு ஓய்வெடுப்பார் அப்புறம்தான் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்றே கூறினேனே தவிர வேறு அவருக்கு ஆபத்து கண்டம் என்று எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. உண்மையிலேயே அவரது ஜாதகத்தில் அப்படி எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. நிஜமாக அவருக்கு ஆயுள் கண்டம் என்பது இல்லை இதுதான் உண்மை மேலும் அவர் அரசியலில் தனியாக நின்றால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொன்னேன். என் தகப்பனார் கூட ரஜினி ரசிகர்தான்’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ரஜினி மன்றத்தினரோ, ‘ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு ரஜினி தடையாக இருப்பாரோ என்று ஸ்டாலின் குடும்பத்தினர் பயப்படுகிறார்கள். அதனால் ரஜினிக்கு நம்பிக்கையுள்ள துறையான ஜோதிட துறை மூலம் ரஜினியின் மீதே உளவியல் கல் எறிகிறார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தததால்தான் ஸ்டாலின் ஆதரவு ஜோதிடர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு கூட்டணி அமைத்தால் ரஜினி வெல்வார் என்று கருத்து தெரிவித்துள்ளார்’ என்கிறார்கள்” என முடிந்தது வாட்ஸ் அப் செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக