Hemavandhana - tamil.oneindia.com :
சென்னை: "சார்.. நான் கொள்ளை எல்லாம் அடிக்கிறவன் இல்லை.. ஆட்களை
வெட்டுவேன்.. அவ்வளவுதான்" என்று போலீசாரிடம் தைரியமாக சொல்கிறார் இந்த
இளம் ரவுடி!
சென்னை எருக்கஞ்சேரி ஐயப்பா தியேட்டருக்கு அருகில் டிராபிக் எப்போதுமே
நெரிசலாக இருக்கும். அதனால் போலீசாரும் வழக்கம்போல் வாகனசோதனையில் நேற்று
பிசியாக இருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 பேர் பைக்கில் வேகமாக வந்தனர். ஹெல்மெட் போடாமல்
இருந்தனர். அவர்களின் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை
பார்த்தும், பைக்கை நிறுத்தாமல் வேகமாக பறந்தனர்.
இதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசாரும், பைக்கை விரட்டி சென்று மடக்கி
அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர்
சிக்கினார். பெயர் நாகராஜ், வயசு 18தான் என்பது தெரியவந்தது.
சென்னை
காவாங்கரையை சேர்ந்தவராம்
நாகராஜ்
அவரிடம் சோதனை நடத்தியதில், பெரிய பட்டா கத்தியை மறைத்து வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
கத்தியை பார்த்ததும், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து அவர்களிடம் போக்குவரத்து
போலீசார் நாகராஜை ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நாகராஜிடம் "இதுவரைக்கும் எத்தனை கொள்ளை அடிச்சிருக்கே"
என்று கேட்டனர். அதற்கு நாகராஜ், "கொள்ளை எல்லாம் அடிக்க மாட்டேன் சார்..
வெட்டுவேன்.." என்றார்
"வெட்டுவியா.. எத்தனை பேர் வெட்டியிருக்கே" என
கேட்டதற்கு, "ஒரு நாலஞ்சு பேரை வெட்டியிருக்கேன்" என்றார் கூலாக. "எந்த
ஊர்ல வெட்டியிருக்கே" என்று போலீசார் கேட்க, "வியாசர் பாடி" என்றார்
இளைஞர்.
நாகராஜ் ஓட்டி வந்த பைக் கூட திருடிட்டு வந்த பைக்தானாம்.. இதையடுத்து
அவரிடமிருந்து பைக், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்து,
கொடுங்கையூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக