செவ்வாய், 16 ஜூலை, 2019

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை- தற்கொலைகள் பற்றியும் தெரியாது: ...மத்திய அரசு திமிர் பதில்

நீட் தேர்வில் சலுகை மத்திய அரசு அதிர்ச்சி பதில் மாணவி அனிதா தற்கொலை tamil.oneindia.com/authors/VelmuruganP : நீட் தேர்வு தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்- வீடியோ டெல்லி: நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவர்கள் தொடர்பாக எந்த தகவலும் மத்திய அரசிடம் இல்லை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்சையாக இருந்து வருகிறது. கிராமப்புற ஏழை மாணவர்கள், பணக்காரர்களை போல் பல ஆயிரம் பணம் கட்டி நீட் தேர்வு கோச்சிங் சேர முடியாது என்றும், பள்ளி கல்வி மதிப்பெண் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
நாட்டில் உள்ள மாநிலங்களில் நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை மட்டுமே கேட்பதால் மத்திய அரசு இதுவரை தமிழகத்தின் கோரிக்கைளுக்கு செவிசாய்க்கவில்லை. மாணவி அனிதா தற்கொலை<
கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவி அனிதா, கடைசியில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படாததால் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் சிலர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
நீட் தேர்வால் இறப்பு<
இந்நிலையில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உயிரிழந்தது குறித்து வேதனை தெரிவித்த தமிழக எம்பிக்கள், நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்யுமா என நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர் நீட் தேர்வில் சலுகை குறிப்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்களான செல்வராஜ், மாணிக்கம் தாகூர், ஆ.ராசா ஆகியோர் தேர்வில் இருந்து விலக்கு கோரிய மாநிலங்கள். எந்த மாதிரி சலுகையை மாநிலங்கள் எதிர்பார்க்கின்றன. தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் நடந்த தற்கொலைகள், நாடு முழுவதும் நீட் தேர்வு தோல்வியால் நடந்த தற்கொலைகள்.. உள்பட பல கேள்விகளை எழுப்பினார்கள்.

 மத்திய அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதவளத்துறை அமைச்சகங்கள் விளக்கம் அளித்தது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டுள்ளன. நீட் தேர்வு விலக்கு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த சலுகையும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசிடம் எந்த விதமான தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதனால் இறக்கிறார்கள் என்பது குறித்து தகவல்களை சேகரிக்காமல் அரசு இப்படி பதில் அளித்த இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: