Kiruba Munusamy :
மருத்துவம்
படிக்க விரும்பிய மாணவி ஒருவர்
தாராவியிலிருந்து காலையில் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். புனே மருத்துவக் கல்லூரியில் படிக்க கல்விக்கடன் கேட்டு வங்கிக்கு சென்றபோது, சொத்து ஏதேனும் இருந்தால் உத்திரவாதமாக வைத்து தரலாம் என்று கூறியிருக்கிறார்கள். தாராவியில் உள்ள சொத்தின் பத்திரத்தை கொடுத்தபோது, சேரியில் அமைந்திருக்கும் காரணத்தால் அதற்கு மதிப்பில்லை எனக்கூறி கல்விக்கடனை தர மறுத்திருக்கிறார்கள்.
ஒன்று எங்களுக்கு சொத்துரிமை இருப்பதில்லை. ஒரு வேளை சொத்து என்று ஏதேனும் இருந்தாலும், அதற்கு மதிப்பிருப்பதில்லை. இச்சூழ்நிலையில் தான், நில உரிமையை மிகவும் அழுத்தமாக பேச வேண்டி வருகிறது.
ஒருபுறம் ஒடுக்கப்பட்டோரின் நிலை இவ்வாறு இருக்க, மறுபுறம் நிலத்தின் மீதான ஆதிக்கம் பரம்பரை பரம்பரையாக ஆதிக்க ஜாதிகளிடமே கைமாறி வருகிறது. இல்லாவிட்டாலும், அனைத்து வித பொருளாதார வளங்களும், உதவிகளும் அவர்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆதிக்க ஜாதிகளின் நிரந்தர ஏகபோக நில உரிமையை கேள்வி கேட்காமல், வரலாற்று ரீதியான நிலவுரிமை மறுப்பை கேள்விக்குட்படுத்தாமல் ஜாதி ஒழிப்பு பேச கூடாது, பேசவும் முடியாது.
மையநீரோட்டத்திலிருந்து ஒதுக்குவது, அதன் விளைவாக கல்வி-வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது ஆகியவற்றை சீர் செய்யாமல் இம்மண்ணில் ஜாதி ஒழிப்பு சாத்தியமில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக