வியாழன், 18 ஜூலை, 2019

தேசிய புலனாய்வு அமைப்பு திருத்த மசோதா .. காவல் படை ஆட்சி நாடாக மாறுகிறதா?


Adv Manoj Liyonzon : "வீழ்வது மக்களாக இருந்தாலும்
வாழ்வது அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும்"
தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா, 2019ன் சில ஷரத்துகளால் இந்தியா காவல்படை ஆட்சி நாடாக மாறும் அபாயம் உள்ளதாலும், சட்டத்தை அரசுகள் தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இது சனநாயக விரோத ஷரத்துகள் கொண்ட மசோதா என்கிற அடிப்படையில் இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்:
1). ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் அனந்த்நாக் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹஸ்னைன் மசூதி.
2). சிபிஐயின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயண்
3). சிபிஐயின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நாதராஜன்
4). கேரள ஆலப்புழா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் மஜீத் ஆரிப் சிபிஐ
5). AIMIMன் மகாராஷ்டிர அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சையத் இம்தியாஸ் ஜலீல்
6). AIMIMன் தெலுங்கானா ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி

மற்றபடி வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த, அல்லது விடுப்பு எடுத்து பதுங்கிக் கொண்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த சனநாயக விரோத சட்ட மசோதாவிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கிறார்கள் என்பது பொருள்

கருத்துகள் இல்லை: