nakkheeran.in/author/santhoshb :
தேசிய
புலனாய்வு அமைப்புக்கு (NATIONAL INVESTIGATION AGENCY) கூடுதல் அதிகாரம்
வழங்கும் மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஏற்கனவே
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதா தற்போது மாநிலங்களவையிலும்
நிறைவேற்றப்பட்டதால், குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்படும்
என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதா சட்ட திருத்தத்தின் மூலமாக
ஆயுதங்களை கடத்துவது, வெடி மருந்துகளை தயாரிப்பது, ஆள்கடத்தல், கள்ள
நோட்டுகளை தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், இணையதளம் மூலமாக
நடத்தப்படும் தீவிரவாதம் போன்ற பல்வேறு விதமான குற்ற வழக்குகளை
விசாரிப்பதற்கான அதிகாரம் என்ஐஏ அமைப்பிற்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக