ஞாயிறு, 14 ஜூலை, 2019

காஞ்சி அத்திவரதரைப் போலவே இருக்கிறாரே தாய்லாந்து சயனநிலை புத்தர்-.. வைரலாகும் படம்

தாய்லாந்தில் சுமார் 30 000 ஆயிரம் அத்தி வரதர் பெருமாள் வேங்கடசால்பதி
அரங்கநாதர் விஷ்ணு கோயில்கள் இருக்கிறது 
ஆனால் என்ன அவை எல்லாவற்றையும் அவர்கள் இன்னும்கூட புத்தர் ஆலயங்களாகத்தான் பேணி வருகிறார்கள் .. என்ன செய்வது பார்பனர்களால் அங்கு குடியேற முடியல்லியே . ஒருவேளை புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கு அதிகம் குடியேறி இருந்தால் குறைந்த பட்சம் அவை ஐயப்பன் கோயில்களாகவாவது உருமாறி இருக்கும் ம்ம்ம்ம் பொல்லாத தாய்லாந்து மக்கள்

 Mathivanan Maran -  tamil.oneindia.com : சென்னை: காஞ்சிபுரத்து அத்திவரதரைப் போலவே இருக்கும் தாய்லாந்து சயனநிலை புத்தர் சிலை படம் சமூக வைரலாகி வருகிறது. 
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்திவரதரின் அருளாசி பெறுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட ஏராளமான விவிஐபிக்கள் காஞ்சி மாநகரை முற்றுகையிட்டு வருகின்றனர். Thailand sleeping Buddha picture goes viral ஒவ்வொருநாளும் காஞ்சிவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை விவரம் ஊடகங்கள் இடம்பெற்று வருகின்றன. காஞ்சி அத்திவரதரை தரிசிக்க வந்து 2 பேர் மாண்ட சம்பவமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்திவரதரை தரிசிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகளில் குளறுபடிகள், முறைகேடுகள் என சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
 இந்த வரிசையில் தற்போது அத்திவரதருடன் தாய்லாந்து சயனநிலை புத்தரும் மல்லுக்கட்டிக் கொண்டு வலம் வருகிறார். காஞ்சி அத்திவரதரைப் போலவே சயனநிலையில் இருக்கிறார் அந்த புத்தர். ஏறக்குறைய இருவரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். இந்த படங்களை வைத்து பல்வேறு கருத்துகளை சமூகவலைதளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிற

கருத்துகள் இல்லை: