திங்கள், 25 மார்ச், 2019

பொன்னார் Vs. வசந்தகுமார்: யார் நல்லவர்?

Raj Dev : காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் பெரும்பணக்காரர்; பொன்னார் மிகையில்லை. மத்திய அரசின் 9 லட்சம் கோடி மதிப்பீடிலான சாகர்மாலா திட்ட வரைவு, 2035–ம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள திட்டம் கொண்டுள்ளது. இதன்படி சீர்காழி மற்றும் கன்னியாகுமரியில் புதிதாக வர்த்தக துறைமுகங்கள் அமைக்க இருக்கிறார்கள். சீர்காழியோ, கன்னியாகுமரியோ தொழில் நகரங்கள் அல்ல. 
அங்கு சரக்கு பெட்டக முனையங்கள் அமைப்பதற்கு பின்னால் காவிரிப்படுகையை அழித்து ஹைட்ரோ கார்பனை உறிஞ்சி கடத்துகின்ற சதித்தனம் அடங்கி உள்ளது. இந்த இயற்கைவளக் கொள்ளைக்கும், சதிக்கும் துணை போகிறவர் தான் பொன்னார். வசந்தகுமார் தனிப்பட்ட வகையில் பெரும்பணக்காரராக இருக்கலாம். ஆனால், குமரி சரக்கு பெட்டக முனையத்தை அமைக்க விட மாட்டேன் என்று உறுதியாக கூறி இருக்கிறார். வசந்தகுமார் அளவுக்கு பொன்னார் பணம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், இயற்கைவள அழிப்புக்கும், அதன் மூலம் தமிழக அரசியல் பொருளாதாரத்தின் முதுகெலும்பான காவிரிப்படுகை அழிப்புக்கும், அதானியின் 9 லட்சம் கோடி கொள்ளை கனவுக்கும் துணை போகும் கார்ப்பரேட் கைக்கூலி. பொன்னாரின் எளிமை எந்த வகையிலும் அவருக்கு குறை வைக்கவில்லை. அவருடைய தேர்தல் செலவு அதானியுடையது; வசந்தகுமார் தனது சொந்த கைக்காசை செலவிடுகிறார்.

ஏழைப் பங்காளர் என்றொரு சித்திரத்தை குமரி மாவட்ட சங்கிகள் பரப்பி வருகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் உண்மை போன்று தெரியும் இந்த வாதம் பொன்னார் பற்றிய ஒரு அப்பட்டமான பொய்யை மறைத்து விடுகிறது. மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கும் பொன்னார் அதானியின் துறைமுக திட்டங்களை மேற்பார்வையிடும் ஒரு சூப்பர்வைசர் மற்றும் எதிர்ப்புகளை சமாளிக்க பயன்படும் உள்ளூர் தம்பிரான் என்றால் ம
வைகுண்டராஜன் போன்றில்லாமல் பணத்தாசை இல்லாதவர் பொன்னார் என்றே வைத்துக் கொள்வோம். பணம் சம்பாதிக்க ஆசை இல்லாத ஒருத்தன் உணர்வுப்பூர்வமாக கார்ப்பரேட் கொள்ளைக்கு துணை போவது எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்!

கருத்துகள் இல்லை: