Nanda Kumaar :
தமிழ் சினிமா கொண்டாட தவறின படம்னு போன வாரமே எழுதி இருந்தேன். ஆனாலும்
யாரும் பாத்த மாதிரி தெரியல அதுனால படத்துல
இருக்கு சில நல்ல விசயங்களை மட்டும் சொல்லலாம்னு தான் இந்த போஸ்ட்.
படத்துல கதைனு பெருசா ஒன்னும் இல்ல. இருந்தாலும் நல்ல திரைக்கதையால அதை சமாளிச்சு இருந்தாங்க. கதையை விட அதை சொல்லும் விதத்துல இருந்த அரசியல் மிகப்பெரியது.
கதை இதான் மும்பையில சதா என்கவுண்டர் பண்ணிட்டு இருக்க ஹீரோவுக்கு வேலை போகுது, அம்மா, காதலினு எல்லாரும் விட்டு போய்டுறாங்க. யாருமே இல்லாம தனிமையில போற ஹீரோவோட வாழ்க்கையில மீண்டும் ஒரு வழக்கு வருது.
ஒரு பதினைஞ்சு வயசு பொண்ணை பாலியல் வன்புணர்வு செஞ்சு கொல்லப்பட்ட வழக்குல ஒரு பானிபூரி விக்குற பிஹாரி கைது செய்யப்பட்டு இருக்க அவன் ஒரு நக்சல் என்ற விசயமும் காவல்துறைக்கு தெரியவருது. அது உண்மையானு கண்டுபுடிச்சு அவனை என்கவுண்டர் பண்ணி கேஸை முடிக்க சொல்லி ஹீரோ கிட்ட சொல்ல அவர் என்ன செஞ்சார் என்பது தான் கதை.
வாழ வழியில்லாம நக்சலாகி போன ஒரு தம்பதியில், மனைவி இறந்து விட எடுத்து என்ன பண்ணலாம்னு தெரியாத அந்த கணவன், தன் பையனுக்கு நல்ல படிப்பையாவது கொடுத்துடனும்னு ஆசை படுறான். நல்ல படிப்பை கொடுத்துட்டா அவன் வாழ்க்கைய நல்லபடியா ஆக்கிடலாம்னு அந்த அப்பா நினைக்குறான். தனக்கு கிடைக்காத எல்லாம் தன் மகனுக்கு தான் கொடுக்க போற கல்வியால கிடைச்சுடும்னு அவன் நம்புறான்.
நல்ல கல்வியால எல்லாத்தையும் மாத்திட முடியும் அதை தான் இந்த கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆண்ட அரசுகள் செய்ய முயற்சி செஞ்சுட்டு இருக்கு.
பிஹார்ல இருந்து வந்தாலே பானிபூரி தான் விப்பான்னு காட்டின விதம் கொஞ்சம் நெருடலா இருந்தாலும் வடநாட்டுல இருந்து வந்தாலே கெட்டவனா தான் இருப்பாங்கன்ற பொது புத்திய சாடி இருக்கது வரவேற்க வைக்குற ஒரு விசயம்.
ஒரு காட்சியில வெளிமாநிலத்துக்கு போய் வேலை செய்ய போறேன் சொல்ற ஒரு இளைஞன் கிட்ட நானே அங்க இருந்து இங்க வந்து பிழைச்சுட்டு இருக்கேன் நீ அங்க போய் பிச்சையா எடுக்க போறனு கேட்கும் போது தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறி இருக்கும்னு எடுத்துக்கலாம்.ந்
அதிகாரமும், பணமும் இருந்தா என்ன வேணா பண்ணலாம்னு சொல்ற மாதிரி நாலு பணக்கார வீட்டு பசங்க பண்ண தப்புக்கு ஒரு அப்பாவிய பலிகடா ஆக்கும் போது ராம்குமார் நினைவு வருவது மறுப்பதற்கு இல்லை.
தன் பையன் மிகப்பெரிய தப்பு பண்ணி இருக்கான் தெரிஞ்சு அவனுக்காக துடிக்குற அப்பாவை பாக்கும் போது நடக்கும் தவறுகளுக்கு சரியான குழந்தை வளர்ப்பு இல்லாததும் ஒரு காரணமாகவும். பையன் சாகபோறான் நினைச்சு அந்த அப்பா தற்கொலை பண்ணிக்கும் போது பிள்ளைகள் தவறுகளுக்கு பெத்தவங்களும் முக்கிய காரணம்னு நினைக்க தோணுது.
தான் ஆசையா பாத்து பாத்து வளத்த மகளை சிதைச்சு அவ கொலைக்கு காரணமான கொலைகாரர்களை கொல்லும் வாய்ப்பு தனக்கு கிடைச்ச பிறகு அதை செய்யாம குற்றவாளிகள் அவங்க மட்டும் இல்ல நாம எல்லாரும் தான் அந்த அப்பா இந்த சமூகத்தின் மீது வைக்கும் குற்றசாட்டுகள் எல்லாம் ஏற்கும் படியாவும் நம்ம தவறுகளை உணரும்படியாவும் இருக்கு.
அந்த பிஹாரி இளைஞனை அவன் ஊருக்கு அனுப்பி வைக்கும் ஹீரோ அவன் கிட்டயே அவனுக்காக எடுத்து வச்ச தோட்டாவை கொடுத்து அனுப்புறது அருமை.
கடைசியா அந்த பாலத்துல நின்னுட்டு குற்றவாளிகளை தண்டிக்குறதை விட அவங்களை திருத்துறது தான் சரியா இருக்கும் அதன்மூலம் தான் குற்றங்கள் குறையும்னு சொல்றது நம்ம எல்லாருக்கும் குறிப்பா இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மாதிரி இண்டன்ஸ்ட் ஜஸ்டிஸ் கேட்பவர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ்.
மீண்டும் வேறு ஒரு விமர்சனத்தோடு டெண்ட் கொட்டாய் பதிவுகளில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக