சனி, 30 மார்ச், 2019

பாலியல் கொடூரத்தை வளர்த்த சினிமாக்களும் மதங்களும்


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒரு கட்டுக்கு அடங்காத சமுக பயங்கரவாதமாக தலைவிரித்து ஆடுகிறது.
சமுகத்தை பிடித்திருப்பது மிகபெரும் நோய் .. காலாரவை விட நூறு மடங்கு கொடூரமான நோய் .. 
இதன் ஊற்று கால் எதுவென்று இன்னும் கூட யாரும் தீவிரமாக சிந்திப்பதாக் தெரியவில்லை. வெறும் பொதுப்புத்தி விமர்சனங்கள்தான் அதிகமாக கேட்கிறது .. 

இந்த நிலை எப்படி உருவானது?
குறிப்பாக இந்திய மக்கள். அதிலும் தமிழக மக்கள் சினிமாவோடு மிகவும் ஒன்றிப்போய் விட்டவர்கள் .
சினிமாவுக்கும் மனிதர்களின் மனதிற்கும் உள்ள தொடர்புகள் பற்றி இன்னும் கூட மக்கள் சிந்திக்க வில்லை .அல்லது மக்களை சிந்திக்க ஊடகங்கள் விடவில்லை ..

ஒரு புறம் மதங்களின் போலி கலாசார காவல் கொடுரம். 
மனிதர்களுக்கு  அடிப்படை தேவையான காதல்  காமம் போன்றவற்றை சமுகம் அனுமதிப்பதில்லையே.
அது மட்டுமல்ல அவற்றை ஒரு குற்றமாக கருதப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறது. 
அப்படி மறைத்து மறைத்து வைத்திருக்கும் முட்டாள்தனம் . 
அதையே திரையில் அளவுக்கு அதிகமாக அதுவும் வன்முறையோடு கலந்து கொடுப்பது.  செயற்கையாக  உண்டாக்கிய தாகத்திற்கு குடிப்பதற்கு சாரயம் கொடுப்பது போல வக்கிர காம காட்சிகளை சினிமா வழங்குகிறது.  
காதல் காட்சிகள் என்ற பெயரில் தொண்ணூறு வீதமான படங்களில் காட்டப்படும் காட்சிகள் எல்லாமே மிகவும் வக்கிரமான வெறித்தனமான காமத்தை தூண்டும் காட்சிகளே . 

பெண் பாத்திரங்களின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடாத எந்த ஒரு ஆண் நடிகரும் சினிமாவில் கிடையாதே? 
அது மட்டுமல்ல கதாநாயகிகள் படித்து நல்ல பண்பு அறிவோடு இருப்பாள் . அந்த பெண்ணை எந்தவித படிப்போ பண்போ இல்லாத ஒரு பேட்டை ரவுடி அடித்து துரத்தி துவம்சம் பண்ணி காதலிப்பதாக கூறுவான் . அவளும் அவன் மேல் காதல் கொண்டு நான் உனக்காத்தான் பிறந்தேன் தலைவா என்று உருகுவாள் ..எவ்வளவு மோசமான மன நோயாளித்தனமான் காட்சிகள் ? ரஜினி கமல் விஜய் அஜித் சூரியா பார்த்திபன் பிரபுதேவா .. இன்னும் அத்தனை சினிமாக்காரனும் இந்த் காமவெறி கூத்தைதானே glorify பண்ணுகிறார்கள் .? முதல் குற்றவாளிகள் இவர்கள்தான்

கருத்துகள் இல்லை: