புதன், 27 மார்ச், 2019

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களின் இனிப்பு பேச்சு .. நேரடி அனுபவம்

தம்பி பிரபு : கருத்துக் கணிப்புகள் போதை மருந்துகள் போல. கஞ்சா அடித்துவிட்டு படித்தால் நினைவில் நன்றாக நிற்கும் என்பார்களே அது போல.
எச்சரிக்கை.
இன்று காலை கைலி அணிந்த இருவர் வீட்டுக்கு வந்தனர். அடிக்கடி அங்கு வரும் வீட்டு புரோக்கர் அவர். நம்பகத்தன்மை கால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள்.
நேரடியாக “அண்ணே! உங்களுக்கு கரெக்டா வந்துரும்ணே! எத்தனை பேர்ணே வீட்டுல” என்றார்.
நான் அருவெறுப்புடன்..”எனக்கு ஓட்டு இங்க இல்லை. எனக்கு நீங்க தரவும் முடியாது? வாங்கவும் மாட்டேன்” என்றேன்.
”ஏன்? நீங்க திமுக வா?” என்றார்.
“ஜன்னலை பாக்கலையா நீங்க” என்றேன்.
”அதனாலென்ன. உங்க ஆளுங்க உங்களை தேடி வரமாட்டாங்க. ஒரு பிரயோசனமும் இல்லை. எங்க ஓட்டு இருக்குன்னு சொல்லுங்க. நான் தர சொல்றேன். நம்மகிட்ட வாங்கிட்டு இப்போதைக்கு நமக்கு ஓட்டுப்போடுங்க. எப்டின்னாலும் இங்க ஆட்சி மாறாது. EPS – OPS மாறமாட்டாங்க. ஒருதடவை அதிமுகவுக்கு மாத்திப் போட்டா என்னாயிரும். யாரு பாக்கப் போறா?. எனக்கும் ஸ்டாலினை பிடிக்கும். கலைஞர் மேல ரொம்ப மரியாதை வச்சுருக்கேன். எப்பேர்ப்பட்ட ஆளு!.. நீங்க வாங்காட்டி எனக்குதான் லாபம். பாத்துக்கோங்க”
”நீங்களே வச்சுக்கங்க. பாத்து போங்க!” என கடுப்புடன் அனுப்பினேன்.
எத்தனை திமிர். எவ்வளவு துணிச்சல். எவ்வளவு ரசவாதம் மிகுந்த வார்த்தைகள். கிருமி எங்கும் நுழைந்து கெடுக்குமே. அது போல. நம்மாட்கள் இப்படி பேச முடியுமா? அதிமுக போன்ற தரகு கட்சியில் மட்டுமே இது சாத்தியம்.

உறுதி மிக்க நம்மிடமே இப்படி பேசுபவன், ஸ்டெர்லைட் கொலை, பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற மக்கள் விரோத செயல்களுக்கு இந்த அரசு துணை போன செய்திகளை அரசியலாக பார்த்து பகுத்தறியாது, வெறும் செய்தியாக அமட்டுமே பார்த்து மறந்து போன சாமான்ய மக்களின் மண்டைக்குள் எப்படி ஊடுறுருவான்.?
நாம் அதீத நம்பிக்கையில் இருப்பது மிகவும் ஆபத்தானது. பணம் அனைத்தையும் மறக்கச் செய்யும்.
கூவத்தூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, அனிதா கொலை, A1 ஜெ மரணம், பரப்பர அக்ரஹார கோர்ட், கர்நாடக சிறை, வைகை ஆற்று நீர் திருட்டு, செல்லூர் ராஜுவின் தெர்மோகோல், பவானி ஆற்றில் திருட்டு, மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு, குட்கா ஊழல் என அனைத்தையும் மறக்க செய்யும்.
நாமும் ஊடுறுவுவோம்.
மறந்ததை நினைவூட்டுவோம்.
விசத்தை முறியடிப்போம்,
பணக்கிருமிகளை அழிப்போம்.
தம்பி பிரபு
25 மார்ச் 2019

கருத்துகள் இல்லை: