வெள்ளி, 29 மார்ச், 2019

ரகுராம் ராஜன் எதிர்கட்சிகளின் நிதி அமைச்சர் பதவிக்கு தயாராகிறார்?

தினமலர் :  புதுடில்லி: எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ரகுராம் ராஜன் காங்.,கிற்கு ஆதரவானவர் என்று கூறப்படுவது உண்டு. காங்.,கின் தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் ரகுராம் பங்கேற்றார் என்கிறார்கள். காங்., அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச வருவாய் திட்டம் போன்றவை ரகுராமின் யோசனைப்படி சேர்க்கப்பட்டவை.< ஆனால் இவற்றை விட, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்ற மோடியின் திட்டம் சிறந்தது னெ ரகுராம் கருதுகிறார்.
விவசாயத்திற்கு ஆதரவாகவும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தினால் தான் விவசாயிகளின் பிரச்னை தீரும். அதற்கு மோடியின் திட்டம் உதவி செய்யும் என்கிறார் ரகுராம்.

கடந்த நான்கு பட்ஜெட்டுகளை பா.ஜ., அரசு அளித்தபோது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதாக காட்டிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைப்பது வாடிக்கை. ஆனால் பொருளாதார நிபுணரான ரகுராம், இந்த யோசனைக்கு எப்போதுமே எதிரானவர்.< நிதித்துறை அமைச்சர்
வரும் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் மத்திய நிதித்துறை அமைச்சராக ரகுராம் நியமிக்கப்படலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இது குறித்த ஒரு கேள்விக்கு பதில் அளித்த ரகுராம், ‛‛என்னால் ஏதாவது பயன் இருக்கும் என்றால் நான் இந்தியாவுக்கு திரும்ப தயார்'' என்றார்.

அவர் கடைசியாக எழுதியுள்ள ‛மூன்றாவது துாண்: சந்தையும் அரசும் மக்களை எவ்வாறு கைவிட்டன'' என்ற தலைப்பிலான புத்தக விற்பனையில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
காங்., அறிவித்த ‛நியாய்' என்று அழைக்கப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் தொடர்பான ஆலோசனைகளை ராகுலுக்கு வழங்கியதாக ரகுராம் ஒப்புக்கொள்கிறார். இந்தியாவில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் என ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் தான் அது.

இத்திட்டத்தை முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் செய்து பார்க்க வேண்டும் என்று ரகுராம் கூறியதை ராகுலும் ஏற்றுக்கொண்டாராம். ரகுராம் கூறும்போது, ‛‛இத்திட்டம் பற்றி என்னால் முடிந்த யோசனைகளை வழங்கி உள்ளேன். இதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்'' என்றார்

கருத்துகள் இல்லை: