.vikatan.comvishnuraj.s: மக்களைவைத்
தேர்தலை முன்னிட்டு தி.மு.க , பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சமீபத்தில்
தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அவற்றில் இடம் பெற்றிருந்த
முக்கியமான வாக்குறுதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்
காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் உள்ள
பேரறிவாளனுக்கு நேற்று திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஸ்டான்லி
மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றார். மேலும் அவருக்குச் சிறுநீரக தொற்று தொடர்பான
பிரச்னையும் இருப்பதால் மருத்துவ மனையில் இருந்தே தொடர் சிகிச்சை
அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பேரறிவாளனின்
தாய் அற்புதம்மாள், குற்றம்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாகச்
சிறையில் உள்ள ஏழு பேரையும் மனிதாபி மான அளவில் விடுதலை செய்ய வேண்டி
தமிழகம் தழுவிய அளவில் பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார். அதில்
தமிழகத்தைச் சார்ந்த முக்கிய கட்சிகள் முக்கியமான அரசியல் அமைப்புகள்
மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்குத் தமிழக அரசு முடிவெடுத்துக்
கொள்ளலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் தமிழக
அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை கடிதத்தை வழங்கியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக