திங்கள், 25 மார்ச், 2019

BBC : நயன்தாரா அறிக்கை : ராதாரவிக்கு கண்டனம் ..ஸ்டாலினுக்கு நன்றி ...

ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நயன்தாரா ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளார். இதில் ராதாரவிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. :
''நான் பொதுவாக அரிதாகவே அறிக்கை விடுவேன். நான் எப்போதும் என்னுடைய தொழில்முறை ரீதியிலான வேலை மூலமாக பேசுவது வழக்கம். ஆனால் இன்று என்னுடைய நிலைப்பாட்டை விரிவாக விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறேன்.
முதலில் ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சுக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராதாரவி மற்றும் அவரை போன்ற பெண் வெறுப்பாளர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பெண்களை தாழ்த்தி பேசுவதன் வழியாகவும், அவர்களை ஆபாச பொருளாக விவரிப்பதன் மூலமாகவும் இம்மாதிரியானவர்கள் ''ஆண் பெருமை'' உணர்வை பெறுகின்றனர்.

இதுபோன்ற ''வலுவான ஆண் பெருமை'' கொண்டவர்களின் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு எனது பச்சாதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு மூத்த நடிகராக ராதாரவி இளம் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் ஆண் பெருமை பேசுபவர்களுக்கு உதாரணமாக உள்ளார். e> ராதாரவி மாதிரியான ஆட்கள் தொழிலில் வீழ்ச்சியை சந்தித்த பிறகு இது போன்ற மலிவான உத்திகளை கையாண்டு வெளிச்சம் பெற முயல்கிறார்கள்.
உண்மையில் இன்னமும் அதிர்ச்சியாக இருக்கும் ஒரு விஷயம் என்னவெனில் ராதாரவியின் ஆணாதிக்க பேச்சுக்கு அங்கிருந்த கூட்டத்தில் சிலர் சிரித்து கைதட்டியிருக்கின்றனர்.
ரசிகர்கள் இதுபோன்று பெண்ணை போகப்பொருளாக சித்தரிக்கும் பேச்சுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வரை ராதாரவி மாதிரியானவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமான நகைச்சுவைகளை மேடையில் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.
ராதாரவியின் இது போன்ற நடத்தைகளை எனது அன்புக்குரிய ரசிகர்களும் நல்ல எண்ணம் கொண்ட பொதுமக்களும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராதாரவியின் பெண்களுக்கு எதிரான பேச்சுக்கும், குறிப்பாக என்னை குறித்து பொதுவில் பேசிய விஷயத்திற்கும் இந்த அறிக்கையின் வாயிலாக வலுவான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். >கடவுளின் அருளால் எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களும், பாசமான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். இது போன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடையில் நான் தொடர்ந்து சீதா, பேய், கடவுள், தோழி, காதலி, மனைவி என எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிப்பேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடைசியாக என்னுடைய ஒரு பணிவான கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி விசாகா வழிகாட்டுதலோடு உள் விசாரணை கமிட்டியை அமைப்பீர்களா?'' என அந்த அறிக்கையில் தனது கேள்வியை பதிவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா

கருத்துகள் இல்லை: