தினத்தந்தி : சென்னை,
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையின்போது வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கம் சிக்கியது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தை கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வாகனத்தில் வந்த தங்கத்தை தபால் தந்தி அலுவலகம் அருகே வாகன சோதனையில் பிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக