வெப்துனியா :அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ஒருபக்கம் அதிமுக பிரமுகர்கள் கூறி வந்தாலும் இன்னொரு பக்கம் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பாஜகவை கூட்டணியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையை சமாதானப்படுத்தும் வேலையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் பாஜக ஏழு தொகுதிகள் கேட்பதாகவும் அவை தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை, சிவகெங்கை , நெல்லை, நீலகிரி, திருச்சி ஆகிய தொகுதிகள் என்றும் செய்திகள் கசிந்துள்ளது. இதற்கு கிட்டத்தட்ட அதிமுக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, சரத்குமார் கட்சி, புதிய தமிழகம், ஆகிய கட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்றால் அதிமுகவை தனிமைப்படுத்திவிட்டு மீதிக்கட்சிகளை வைத்து பாஜக தனிக்கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக