மாலைமலர் :ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்வு.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்கள். வீரர்கள் சென்ற வாகனம் லடூமோடு பகுதியில் சென்றபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதச் செய்தனர்.
இதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இதில் இருந்த வீரர்களில் 8 பேரும், அதன்பின் 18 பேரும் இறந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்பின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் இதற்கு பதிலடி கொடுக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நாளை ஸ்ரீநகர் விரைகிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக