tamil.cdn.zeenews.com
கர்நாடகாவில்
மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது முதலாகவே
இருகட்சிகளுக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. தங்களுக்கு
பதவி கிடைக்கவில்லை என்று மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சில
அதிருப்தி எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை
பயன்படுத்திக்கொள்ள நினைத்த பா.ஜ.க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற திட்டத்தின் மூலம்
அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு
வந்தது.
அந்த வகையில் மும்பையில் சில காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக தலைவர்களுடன் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. கர்நாடகாவில் ஆட்சி கவிழுமா? என்ற நிலை ஏற்ப்பட்டது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதுக்குறித்து கருத்து கூறிய எடியூரப்பா, ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை. இது போலியானது. இந்த மாதிரி போலியான ஆடியோவை உருவாக்குவதில் முதல் அமைச்சர் குமாராசாமி வல்லவர். இந்த ஆடியோ குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து தன்னை விலகிக் கொள்ளுவேன். மேலும் தன்னுடைய எம்.எம்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வேன் என பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.
முன்னதாக ஆடியோ குறித்து மறுப்பு தெரிவித்து வந்த எடியூரப்பா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், கர்நாடகா முதல்வர் குமாராசாமி மூன்றாம் தரப்பு அரசியலை செய்கிறார். அவர் மிரட்டல் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார். குருமித்கல் தொகுதி ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.வின்(நாகன கவுடா) மகன் நள்ளிரவு 12.30 மணிக்கு என்னை வந்து சந்தித்தார். அவரிடம் பேசியது உண்மை தான். அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் தான். அவரை அனுப்பியது முதல்வர் குமாராசாமி தான். நாகன கவுடாவுடன் நான் பேசிய முழு ஆடியோவை வெளியிடவில்லை. அவர்களுக்கு தகுந்தார் போல சில பேச்சுக்களை மட்டும் வெளியிட்டு உண்மையை மறைத்துள்ளனர். முழு ஆடியோ விரைவில் வெளிவரும். அதில் உண்மை நிலவரம் தெரியும்.
சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என ஆவேசமாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக