திங்கள், 11 பிப்ரவரி, 2019

ரஜினி சவுந்தர்யாவின் மகன் தன் தாயின் திருமணத்தில்..

  டான் அசோக் :  ரஜினி தன் படங்களில் எல்லாம் பெண்களுக்கு, "பொண்ணுனா இப்படி ுக்கிறார். ரஜினி ரசிகர்கள் பின்பற்ற வேண்டியது திரை ரஜினியை இல்லை. தன் குடும்பப் பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் இந்த நிஜ ரஜினியைதான்.
இருக்கணும், பொண்ணுனா அப்படி இருக்கணும், அடக்கம், ஒடுக்கம், அது, இது.." என்று இந்துத்துவ வாழ்க்கை முறையை போதிப்பார். ஆனால் தன் மகளின் வாழ்க்கை என வரும்போது அவரின் காதலை ஏற்றிருக்கிறார். பின்னர் விவாகரத்து முடிவை ஏற்றிருக்கிறார். இப்போது மறுமண முடிவை ஏற்றிருக்கிறார். இதையெல்லாம் கூட அவர் திரைமறைவில், ஒளிந்து ஒளிந்து செய்யவில்லை. மிக வெளிப்படையாக எல்லோரையும் திருமணத்திற்கு அழைத்து பட்டவர்த்தனமான மகிழ்ச்சியோடு செய்திர
சவுந்தர்யாவின் சிறுவயது மகன் தன் தாயின் திருமணத்தில் பங்கேற்பதையும், தன் தாயுடனும், தன் தாய் தேர்ந்தெடுத்துள்ள புதிய வாழ்க்கைத்துணையுடனும் மகிழ்ச்சியாக உரையாடுவதையும், விளையாடுவதையும் கண்டு ரஜினி பூரிக்கிறார். நமக்கும் அந்தக் காட்சிகளை எல்லாம் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதை எல்லாம் பார்த்து, ரஜினி வீட்டில் நிறைந்திருக்கும் இந்தப் பெண் விடுதலையைப் பார்த்து பெரியாரியர்களும் ரஜினிக்கு இணையாக பூரிக்கிறார்கள்.
ஆனால் ரஜினிக்கு நெருக்கமான, ரஜினியை சொந்தம் கொண்டாடும், ரஜினியின் நண்பர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்துத்துவ, பிஜேபி, RSS ஆட்களோ வயிறெரிகிறார்கள்!! சவுந்தர்யாவும் அவர் மகனும் அழகாகச் சிரிக்கும் புகைப்படத்தை பார்த்து ஆபாசமாக அர்ச்சிக்கிறார்கள். மிகக்கேவலமான கண்ணோட்டத்தில் கொச்சையாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் எல்லாம் இணையத்தில் பெரியாரியர்கள்தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதான் தமிழ்நாடு. இதைத்தான் தமிழ்நாட்டுக்கு பெரியார் செய்துவிட்டுப் போயிருக்கிறார். இதனால்தான் தமிழகத்தில்வாழும் சாமானியன் முதல் ரஜினி வரை பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்குப் பெரியாரைத் தெரியாது என்றாலும், உங்களுக்குப் பெரியாரைப் பிடிக்காது என்றாலும், பெரியார் வெறுத்த ஆன்மீக அரசியலை செய்யத்துடிப்பவராக நீங்கள் இருந்தாலும், பெரியாரும், பெரியாரியர்களும், பெரியாரியம் படிந்த இந்த மண்ணும் உங்களுக்கு நன்மையைத் தான் செய்வார்கள். உங்கள் மகிழ்ச்சியில் தாங்களும் மகிழ்வார்கள். உங்கள் குடும்பப் பெண்களின் விலங்குகள் உடைபடும்போது அதை தங்கள் வெற்றியாகக் கொண்டாடுவார்கள்.
பகைவருக்கும் அருளும் நன்னெஞ்சம் அவர்களின் கடவுள்களுக்கில்லை. கடவுளைக் கொண்டாடும் அவர்களின் மதங்களுக்கும் இல்லை. ஆனால் மனித உரிமை செழிக்க வாழ்நாளெல்லாம் போராடிய எங்கள் கிழவனுக்கு உண்டு. எங்கள் கிழவனுக்கு மட்டும்தான் உண்டு. ரஜினி இதைப் புரிந்துகொள்வாராக!! வாழ்க பெரியார்.
-டான் அசோக்

கருத்துகள் இல்லை: