முகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
சின்னத்தம்பி யானையை காயமின்றி பிடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று முதல் யானையை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் முயற்சித்து வந்தனர். இதனையடுத்து வனத்துறையினரும், மயக்க ஊசிகளுடன் மருத்துவர் குழுவினரும் , சின்னத்தம்பியை பிடிக்க களம் இறங்கினர். நான்கு மயக்க ஊசிகள் செலுத்தியும் சற்றும் அசராமல், வாழை தோட்டத்திற்குள் புகுந்த சின்னத்தம்பி யானை, வனத்துறையினரையும் கும்கி யானைகளையும் திணறடித்தது. பின்னர் சிறிது சிறிதாக மயக்க நிலையை அடைந்த சின்னத்தம்பி யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் லாவகமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக