nakkheeran.in/author/kamalkumar:
நேற்று இரவு, ஈரோடு மாவட்டம், ஓடாநிலை எனும்
இடத்தில் உயர் மின் கோபுர கம்பிகளுக்கு கீழே மதிமுக தலைவர் வைகோ கையில்
வெறும் குழல் விளக்கு பிடித்தபோது எந்த விதமான இணைப்பும் இன்றி
அது எரிந்தது. இதுகுறித்து அவர் கூறியது,
230 கிலோ வாட் மின்சாரம் கொண்டுசெல்லப்படும்
மின்கம்பிகளுக்கு கீழே நான் நிற்கிறேன். என் கையிலுள்ள இந்த குழல் விளக்கு
எரிகிறது, என் உடலில் மின்சாரம் பாய்கிறது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு
போடப்பட்டது. இதுவே 400 கிலோவாட் போடும்பொழுது, 800 கிலோவாட் அளவிற்கு
போடப்படும்பொழுது அந்த பகுதியில் எந்த அளவிற்கு மின்சாரம் பாயும். அது எந்த
அளவிற்கு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும், விவசாயத்தை அழிக்கும்.
அதுமட்டுமல்ல நான்கு இடங்களிலே பெரிய கிணறு போன்ற குழிகளை வெட்டி அதிலே
இந்த மின் கோபுரங்களை அமைக்கிறார்கள். இதில் ஒரு ஏக்கர், ஒன்றரை ஏக்கர்
பாழாகி அந்த குடும்பமே அழிந்து போகிறது.
< இதை எதற்காக காட்டுகிறேனென்றால், 230 கிலோவாட் பாயும் கம்பி தடத்திற்கு கீழே நின்றாலே இவ்வளவு பாய்கிறதே இதுவே 400 கிலோவாட், 800 கிலோவாட் பாயும்பொழுது எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை முதலில் அரசு உணரவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எங்களது உயிர்கொள்கை. மின்சாரத்திற்கு எதிரியல்ல நாங்கள். அதனால்தான் நாங்கள் கேபிள் வழியாக கொண்டுசெல்ல வேண்டும் எனக் கோருகிறோம்.

உலகநாடுகளுக்கெல்லாம் கொண்டுபோக போகிறோம்,
3100 கிலோமீட்டருக்கு அப்பால், இங்கிருந்து 1100 கிலோவாட் மின்சாரத்தை
பூமிக்கடியிலே, கடலுக்கடியிலே கொண்டுசெல்லப்போகிறேன் எனக்கூறும் பிரதமர்
நரேந்திரமோடி இங்கே இந்த பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும்
விவசாயிகளைப்பற்றி எண்ணியிருப்பாரா? இந்த தமிழ்நாடு அரசு முதுகெலும்பற்ற
அரசு எதிர்காலத்தில் இந்த விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை பற்றி
கொஞ்சமாவது சிந்தித்திருக்குமா? இந்த கவலையினால்தான், நம் சந்ததிகளைக்
காப்பாற்றும் விவசாயிகளை காப்பாற்ற மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதுகாக்க,
அந்த பகுதியில் விவசாயம் செய்யமுடியாது. பின் எப்படி விவசாயம்
செய்யமுடியும். இந்த உண்மைகளை உணர்த்துவதற்காகத்தான் இந்த இடத்திற்கு
வந்திருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக