ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள் ... எச்சரிக்கை .. எந்த மோசடிக்கும் அஞ்சாத சங்கிகள் கூட்டம் ...

மருதம் :  :எச்சரிக்கை_பதிவு : தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் பேர் இங்கேயே குடியேறுகிறார்கள் என்ற விபரம் இங்கு யாருக்கும் தெரிவதில்லை.
லட்சக்கணக்கான வட மாநில மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் திரும்ப போகிறார்கள் / எத்தனை
ஒரு இந்திய குடிமகன் இந்திய ஒன்றியத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம், சொத்துகளை வாங்கலாம் , விற்கலாம், (காஷ்மீரை தவிர) , எந்த இடத்திலும் பணிபுரியலாம் என இந்திய அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது உண்மை தான்.. தவறில்லை... ஆனால் அது திட்டமிடப்பட்டு நடக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும் ..
இப்போது விசயத்திற்கு வருவோம்..
ஒரு குடிமகன் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் வகுத்துள்ள நடைமுறைகளில் ..
1 . அவன் குறைந்த பட்சம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் ஓரே இடத்தில் தங்கியிருக்க வேண்டும் ..
2 . ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, உள்ளிட்ட குடியிருப்பு ஆவணங்களை சரிபார்த்து அவனை சேர்த்து கொள்ளலாம்..
ஒரு வேளை அவன் தங்கியிருக்கும் முகவரியை வைத்து அவன் வங்கி கணக்கை துவங்கி இருந்தாலோ, பான் கார்டு அல்லது ஆதார் கார்டு வைத்திருந்தாலோ அதை ஆவணங்களாக வைத்து கூட அவனை அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் ..
இங்கு வங்கி கணக்கு, பான் கார்டு துவங்குவது எல்லாம் தற்போது சர்வ சாதாரணமாயிற்று.. ஒரு புரோக்கரை பிடித்து சில ஆயிரங்களை தள்ளினால் ஒரே வாரத்தில் பெற்று விடலாம்.

ஆதார் கார்டு புதிதாக பெறுவது / முகவரியை திருத்தம் செய்வது என ஆதார் கார்டு முழுவதும் தனியார் ஏஜென்சி மூலமே நிர்வகிக்கப்படுகிறது ... இதில் முறைகேடுகள் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இப்படி முறைகேடாக பெறும் வங்கி கணக்கையோ அல்லது ஆதார் கார்டை வைத்து கூட எளிதாக வாக்காளர் பட்டியலில் நுழையலாம் ..
தேர்தல் கமிஷன் 18 வயது பூர்த்தியடைந்த எந்த மனிதரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என ஒரு டார்கெட் பிக்ஸ் செய்து வேலை வாங்குகிறது அரசு இயந்திரங்களை ...
குறுகிய காலங்களில் உருவாக்கப்படும் இந்த வாக்காளர் பட்டியல் 100% சரியாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
மேலே சொன்னது போல், ஆதார் கார்டு, வங்கி கணக்கு வைத்திருந்து, அதிகாரிகளின் விசாரணை நேரத்தில் அந்த இடத்தில் அவன் இருந்தாலே அவன் வாக்காளர் ஆகி விடுகிறான்.
அந்த வங்கி கணக்கு, பான் கார்டு எப்படி பெற்றிருப்பான் என யாரும் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.. வாக்காளர் பட்டியல் தானே என அலட்சியமாக கடந்து செல்லும் அதிகாரிகளும் இங்குண்டு. குறுகிய காலத்தில் 100% சரிபார்க்கவும் சாத்தியமில்லாமல் போவதுண்டு.
#அதனால்
கடந்த 31.1. 2019 அன்று தேர்தல் கமிஷன் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை (Voters list) நாம் ஒவ்வொருவரும் / கட்சி முகவர்களும் அதை சரி பார்த்து கொள்வது நமது ஒவ்வொருவரின் கடமை.
குறிப்பாக வட மாநில மக்களை வாக்காளர் பட்டியல்களில் சேர்த்திருப்பின் அதை தீவிரமாக ஆராய வேண்டும் ..
1 . அவர்கள் குடும்பமாக வசித்து வருகிறார்களா? அல்லது தனிமையில் வசிக்கிறார்களா?
2. எவ்வளவு வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார்கள்?
3. வட மாநிலங்களில் அவர்களுக்கு வாக்கு உரிமை இருந்திருப்பின் அதை Cancel செய்து தான் இங்கு வாக்காளர் அட்டையை பெற்றார்களா? என கூட ஆராயலாம்..
4. அவர்களது வாக்காளர் அடையாள அட்டை குறித்த சந்தேகமிருப்பின் தொடர்புடைய தாலுக ஆபிஸ் சென்று கூட நமது இந்த சந்தேகங்களை நிவிர்த்தி செய்து கொள்ளலாம்.
வருட கணக்கில் இங்கு வாழ்ந்து வரும் வட மாநில அன்பர்களை பற்றி நமக்கு கவலையில்லை. சமீப காலமாக வருகை தருபவர்களை தான் குறிப்பிடுகிறேன்.
ஏனெனில் "வாக்களிப்பது " எனும் ஜனநாயக உரிமையில் அபத்தங்கள் இருப்பின் அதை களைவதில் நம் எல்லோருக்கும் பொறுப்புண்டு.
வட மாநில மக்கள் இங்கு வாக்களிப்பதில் நமக்கு ஆட்சேபனையோ, வருத்தமோ இல்லை. இந்திய அரசியலமைப்பின் பால் இங்கு அனைவருக்கும் வாக்களிக்க உரிமையுண்டு . வரவேற்போம் ..
ஆனால் ... அதே நேரத்தில் அது சட்டத்திற்குட்பட்ட, அரசு காட்டும் தெளிவுரைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பது மட்டுமே நமது ஆசை..
ஏனெனில் இங்கு தமிழ் மண்ணை சித்தாந்த ரீதியாக மாற்ற இங்கு நடைபெற்று கொண்டிருக்கும் பல மடை மாற்று வேலைகளில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடாது என்பதில் நாம் ஊஷாராக இருக்க வேண்டும். நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்க கூடும்.

கருத்துகள் இல்லை: