don vetrio selvini :
மெட்ரோ ரயிலை ஜெயலலிதா கொண்டு வந்தார்
எனவும், அவர் தான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றினார் எனவும் ஜெயலலிதா பக்தர்கள் வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
சென்னை மெட்ரோ திட்டம் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உருவான திட்டம். மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது முதல் , ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்துடன் கடனுதவி பெறும் ஒப்பந்தம் போடுவது வரை செயலாற்றியவர் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த திட்டம் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று மோடி திறந்து வைத்திருக்கும் பகுதிகள் முதல் ஏற்கனவே பயன்பாட்டில்
இருக்கும் பகுதிகள் வரை, சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் மற்றும்
ஆலந்தூர் வரையிலான 45 கி.மீ மெட்ரோ திட்டத்திற்கு(Chennai Metro Phase I)
நிதியை ஏற்பாடு செய்தவர் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் திட்டம் என்பதாலும், திமுக அரசு நடைமுறைப்படுத்திய திட்டம் என்பதாலும், ஜெயலலிதா போட்ட முட்டுக்கட்டைகள் ஏராளம். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது 30% மேற்பட்ட பணிகள் முடித்துவிட்ட காரணத்தால், மெட்ரோ திட்டம் தப்பித்தது.இல்லையெனில் மதுரவாயில் சாலைத் திட்டத்திற்கு நேர்ந்த கெதிதான் சென்னை மெட்ரோ திட்டத்திற்கும் நிகழ்ந்திருக்கும்.
" தமிழக அரசு மெட்ரோ திட்டப் பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை" என்று இந்தியாவின் மெட்ரோ மனிதன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் ஒரு பேட்டியில் (மார்ச் 21 2015) சொல்லியிருக்கிறார். மேட்ரோ திட்டத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதற்கு இது ஒர் உதாரணம்.
ஜெயலலிதா கொண்டுவர நினைத்தது மோனோ ரயில் திட்டம். இது, சென்னை போன்ற நகரங்களுக்கு ஒத்துவராத திட்டம். ஆனாலும், தனது பிடிவாதம் காரணமாக மோனோ ரயில் திட்டத்தை ஆதரித்து, மெட்ரோ திட்டப்பணிகளை முடக்கினார் ஜெயலலிதா.
எனவே, ஜெயலலிதா தான் மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்தார் என்று இனிமேலும் புளுக்காதீர்கள்.
#ChennaiMetro

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக