ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

ஈரோடு, திருப்பூர், கோவை.. வாயால் மோடி சுட்ட வடைகள் .. தவறான பொருளதார கொள்கையால் சர்வம் ..மயம்

தமிழகத்திலேயே அதிகமாக பிஜேபிக்கு ஆதரவு இருப்பது கொங்கு மண்டலத்தில்தான்,, ஆனால் மோடியின் தவறான பொருளதார கொள்கையால் பாதிக்கப்பட்டு இருப்பதும் கொங்கு மண்டல பகுதிகளான ஈரோடு திருப்பூர், கோவைதான், இம்மூன்று நகரங்களுக்கு இடையே இருக்கும் பெருமநல்லூரில் தேசிய நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட்ட மேடையில் மோடி பேசும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் எந்த ஒரு சுயதொழில் அதிபரும் தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுகொள்ளும் யானைதான், ஆம் கொங்கு பகுதியின் அடிப்படை ஆதரமான சுயதொழில்துறை எனும் யானையின் காதில் புகுந்த எறும்புதான் மோடியின், அவசரகோல பணமதிப்பிழப்பும், சரியாக திட்டமிடப்படதா GST யும்,
Diwakar Singh : டீ மானிடைசேன் அறிவிக்கப்பட்ட ஒரு அமங்களகரமான இரவு
அது. அன்று இரவு 7:45 - 8 மணிக்கு இருக்கும், அந்நேரத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள
Palldam High Tech Weweing Park ல் நான் என்னுடைய Textile தொழில் நண்பரின் Weweing factory யில் பேசிக்கொண்டிருந்தோம், பேசிக்கொண்டே மொபைல் போனை பார்த்துகொண்டே இருந்தவர் டக்கென துள்ளி குததித்தார்.
அண்ணா இங்கே பாருங்க தூள் கிளப்பிட்டார் மோடி,
இனி பாருங்க,

ரியல் எஸ்டேட் எல்லாம் டக்குன்னு ரேட் குறைஞ்சுடும்,
அப்பார்ண்மெண்ட் விலை குறைஞ்சுடும்,
நகை விலை குறைஞ்சுடும்,
ப்ளாக்கில் வித்த பஞ்சு இனி இருக்காது,
பஞ்சு விலை குறைஞ்சுடும்,
ப்ளாக் மணி வச்சுருக்கிறவன் எல்லாம் காலி,
என்று வரிசையாக சொல்லி கடைசியில் சொன்னார் மோடி 1000ரூவாய், 500 ரூவாய் நோட்டுகள் செல்லாதுன்னு சொல்லிட்டார் என்று மேலும் பல விசயங்களை சொல்லி பாலாறும், தேனாறும் ஒடும் என்கிற ரேஞ்சில் சிலாகித்தார்.

அதன் பின்னரும் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தாலும், கடந்த மாதம் அவரை சந்தித்தபோது சொன்னதுதான் ஹைலைட்:
'இவங்க ரெண்டு பேரும்(மத்திய, மாநில அரசுகள்) இருந்தாங்கன்னா நம்ம தொழில் நட்டுகிட்டு போயிறும்ங்ன்னா' என்றார்,
நான் ஒன்னும் சொல்லலே,, 😂😂
அந்த அளவுக்கு திருப்பூர் கோவை, ஈரோடு மாவட்டங்களில் அவசர கோல பணமதிப்பிப்பும், திட்டமிடப்படாத GST யும், சேர்ந்து Job work முதல், பணப்புழக்கம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவேதான் சொல்கிறோம், நீங்கள் வந்திருக்கும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து சொல்கிறோம்,
#GoBackModi

கருத்துகள் இல்லை: