
LR Jagadheesan : தமிழ்நாட்டின்
சமீபத்திய தொழில்முயற்சிகளின் மாபெரும் சாதனை திருப்பூர். அதுவும் உலக அளவில். ஆனால் அதை நாசமாக்கியதில் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு முக்கியபங்குண்டு.
அப்படி ஒரு அநியாயம் செய்தவர் அந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு வருவதற்கு முக்கியகாரணம் மதம். அரசியலில் மதவெறியை கலந்துவிட்டால் உங்கள் அடிமடியில் இருப்பதையும் பிடுங்கினாலும் நீங்கள் கண்டுகொள்ளமாட்டீர்கள்.
கடின உழைப்புக்கும் சுயதொழில் முன்னேற்றத்துக்கும் முன்னுதாரணமான கொங்கு மண்டலத்தில் குறிப்பாக திருப்பூரில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது.
தங்களின் பொருளாதார சுயசார்பை தொழில்வளத்தை நேரடியாக பாதித்த ஆட்சியாளரை
ஒரு நகரம் வரவேற்கத்தயாராவதை வேறு எப்படி புரிந்துகொள்ள முடியும்? மோடி
அரசின் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பும் ஜி எஸ் டி வரிவிதிப்பு
குளறுபடிகளும் திருப்பூரை மோசமாக பாதித்த இரண்டு முக்கிய காரணிகள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கப்போனால் எதிர்ப்பு வரும் என்று அஞ்சும் ஒரு பிரதமர் தன் ஆட்சியால் அதைவிட பெரிய பாதிப்பை சந்தித்த திருப்பூருக்கு தைரியமாக வருகிறார் என்றால் மதம் அங்கே அவருக்கு மிகப்பெரிய கேடயமாய் இருக்கிறது/இருக்கும் என்கிற நம்பிக்கை தானே காரணமாய் இருக்க முடியும்.
Rajesh : 17 வருடங்களாக freight forwarding தொழிலில் அடிப்படை பணியாளனக வந்து, ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக வந்திருக்கிறேன்.. இவ்வளவு மோசமாக சென்றதில்லை.. தொழிலாளி, முதலாளியாக உயார்தவர்கள் என்னை போன்றவர்கள் பல பேர்.. ஆனால் இன்றோ நிலமை தலைகீழ்.... ஆனால் இன்னும் முட்டாள்தனமாக இந்த மோடி அரசாங்கத்தை ஆதரிக்கும் அறிவாளிகள் இருப்பதை கண்டால் தான் புரியவில்லை மூளை ஒன்று உள்ளதா இல்லையா என்று...கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கப்போனால் எதிர்ப்பு வரும் என்று அஞ்சும் ஒரு பிரதமர் தன் ஆட்சியால் அதைவிட பெரிய பாதிப்பை சந்தித்த திருப்பூருக்கு தைரியமாக வருகிறார் என்றால் மதம் அங்கே அவருக்கு மிகப்பெரிய கேடயமாய் இருக்கிறது/இருக்கும் என்கிற நம்பிக்கை தானே காரணமாய் இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக