திங்கள், 11 பிப்ரவரி, 2019

ட்விட்டர் கேள்வி : எங்களை விசாரிக்க இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கா?

aanthai : பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் உள்ள பிரபலங்களை அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி ட்ரோல் செய்யும் முறை பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் இனவாதம் தொடங்கி பயங்கரவாதம் வரை இதில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே இது போன்ற சமூக வலைதளங்களில் இந்திய பயனாளர் களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், தகவல் தொழில்நுட்பம் அதிகாரிகளை ஆஜராகும்படி இந்திய நாடளுமன்றத்தின் ஐடி துறை தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களைக கொண்ட நிலைக்குழு அழைப்பி அனுப்பி இருந்தது. ஆனால் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த பிப்.,1ம் தேதி, பா.ஜ.க, எம்.பி.,அனுராக் தாக்கூர் தலைமையில் இயங்கும் நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டர் அதிகாரி களுக்கு கடிதம் மூலம் அழைப்பு அனுப்பியது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக கொண்ட நிலைக்குழு முன்பு உங்கள் நிறுவனத்தின் தலைவர் ஆஜராக வேண்டும். அவருடன், பிரதிநிதி ஒருவரையும் அழைத்து வரலாம் எனக் கூறப் பட்டது. முதலில் கடந்த 7 ம் தேதி வரை கெடு விதித்த இந்த குழு ட்விட்டர் சிஇஓ ஆஜராக வசதியாக தேதியை வரும் 11ம் தேதிக்கு அவகாசத்தை நீடித்தது..
இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தை சேர்ந்த விஜய் கடே, நாடாளுமன்ற நிலைக்குழு குழு விற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். ட்விட்டர் அதிகாரிகளுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் போதாது, என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை பொறுத்தவரையில், எங்களின் கணக்குகள், விதிமுறைகள் நிர்வாக நடைமுறைகள் பற்றிக் கேள்வி எழுப்ப முடியாது என விஜய் கடே கூறி உள்ளார். பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தலில் சமூக வலை தளங்கள் தலையீடு குறித்த கவலைகள் எழுந்த நிலையில், இப் பிரச்னை பற்றி விவாதிக் கவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக கொண்ட நிலைக்குழு கடிதம் அனுப்பியது. ஆனால் தேவையற்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக கொண்ட நிலைக்குழுவின் அதிகாரம் உரிமைகள் குறித்து ட்விட்டர் கேள்வி எழுப்பி உள்ளது..
அமெரிக்க பார்லிமென்ட், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்திற்கு நான்காவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அழைப்பாணை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் பதிலுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என இதுவரை வெளியிடப்படவில்லை

கருத்துகள் இல்லை: