திங்கள், 22 அக்டோபர், 2018

படேல் சிலைத் திறப்பை எதிர்க்கும் பூர்வகுடி மக்கள்!

Swathi K : சர்தார் படேல் சிலைத் திறப்பை எதிர்க்கும் பூர்வகுடி மக்கள்!
ஒற்றுமையின் சிலை (statue of liberty) எனப் பெயரிடப்பட்ட சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலத்தில் இந்திய அரசால் கட்டப்பட்டு வருகிறது, சுமார் ரூபாய் 3000 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தச் சிலையின் திறப்பு விழா வரும் அக்டோபர் 31 ம் தேதி நடைபெறுகிறது. உலகில் மிக உயரமான சிலையான இதைத் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. மத்திய அரசும், மாநில அரசும் இந்தச் சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பூர்வகுடி மக்கள் இந்தச் சிலை கட்டுமானத்தை எதிர்த்து, சிலை திறக்கப்படும் அதே நாளில் தங்கள் வீடுகளில் சமைக்காமல் துக்கம் அனுசரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் மரணம் நிகழ்ந்து துக்கம் அனுசரிக்கும் வீடுகளில் சமைக்காமல் இருப்பது மரபு ஆகும்.
இந்தச் சிலை கட்டுமானத்துக்காக, தங்களுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாலும், இந்தச் சிலையைச் சார்ந்த சுற்றுலாவைப் பெருக்குவதற்கான சர்தார் சரோவர் நர்மதா திட்டத்துக்காக இவர்கள் வாழ்விடம் பறிக்கப்பட்டதாலும் அப்பகுதி மக்கள் அனைவரும் சிலைத் திறப்பு தேதியில் பந்த் நிகழும் என்று அறிவித்திருக்கிறார்கள், இதற்காகப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படும் என்று 100 க்கு மேற்பட்ட பூர்வகுடி அமைப்புகள் சேர்ந்து முடிவெடுத்துள்ளன.

குஜராத் மாநில அரசு வாக்களித்தது போல பாதிப் பேருக்கு மாற்று நிலங்களை வழங்கவில்லை, அப்படியே வழங்கிய மீதி இடங்களிலும் விளைநிலங்களைப் பறித்துக்கொண்டு, வேறு பகுதியில் வறண்ட பூமியை மாற்றாக அளித்திருப்பதாகவும், இதில் விவசாயம் செய்ய இயலவில்லை என்றும், மாற்று வேலை, வாழ்வாதாரம் என்று எதுவுமே வழங்கப்படவில்லை என்றும் மக்கள் குரலெழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தினால் ஏறத்தாழ 75 ,000 பூர்வகுடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது போராட்டக்காரர்கள் தரப்பு.
Local tribal organisations said as many as 75,000 tribals adversely affected by the Statue of Unity project would oppose the Prime Minister and the unveiling of statue at Kevadia in Narmada district.
"No food will be cooked in 72 villages affected by the entire project, as we will be mourning on that day. The project is being carried out for our destruction," said Dr Praful Vasava, a tribal leader. Traditionally, food is not cooked in a tribal village when they are mourning for the dead.
The tribals are complaining that their lands were taken away for the Sardar Sarovar Narmada Project, near the statue site, as well as for the statue of unity and all other tourism activities which have been planned in the area.
Out of the 72 villages affected by the statue project, the most affected are 32, where 19 villages are where rehabilitation has not been allegedly completed, six villages where the current Kevadia colony is situated and seven villages in Garudeshwar block, where only compensation has been paid but other commitments like land and jobs have not been fulfilled.
"The government took away our land and only paid us the money for it, but other commitments like alternative land, providing jobs to the affected have not been carried out as per the rehabilitation package, according to the Narmada Tribunal Authority. Some of the affected have not even accepted that money, opposing the land acquisition," said Rameshbhai from Garudeshwar.
Reference:
https://www.ndtv.com/…/sardar-patel-statue-why-75-000-triba…
https://www.vikatan.com/…/140206-tribals-oppose-opening-of-…

கருத்துகள் இல்லை: