Sowmian Vaidyanathan : கிட்டத்தட்ட
இரண்டு கோடிக்கும் அதிகமான தமிழக தமிழர்கள் சமூக வலைத்தளங்களில் தினமும்
புழங்கி வருகின்றனர். அதில் மிகச் சரியாக ஒன்னரை கோடிக்கும் அதிகமானோர்
சமூக வலைத்தளங்களையும் அதில் வருகின்ற செய்திகளையும் தினம் குறைந்த பட்ச
சராசரியாக அரை மணி நேரமாவது படித்தோ அல்லது பதிவு செய்தோ அல்லது பகிர்வு
செய்தோ வருகின்றனர்.
நிலைமை இப்படியிருக்க, இந்த ஒன்னரை கோடி மக்களிடம் தங்கள் தரப்பு நியாயங்களையும், தங்களுக்கு எதிரான வாதங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமான எதிர் வாதங்களையும், பதிலுரைகளையும் தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தினம் தினம் பகிர வேண்டிய கட்டாயம் இன்றைய தேதியில் உருவாகியிருப்பதை யாரும் மறுக்க முடியவே முடியாது..!
இந்த சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை, முதன் முதலாக ஒரு தனி அரசியல் கட்சி என்றில்லாமல்... திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிரான நபர்கள்.... குறிப்பாக பார்ப்பனர்கள் ஒன்றிணைந்து, அவர்கள் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும், அவர்களால் ஆட்டுவிக்கப்படுவதே தெரியாமல் அல்லது புரியாமல் செயல்பட்ட... செயல்பட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களும்.....
இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் செயலாற்றி சற்றேரக் குறைய 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களையும் பொதுவான மக்களையும் திமுகவுக்கு எதிராக நோகாமல் வாக்களிக்க வைத்து.... அதன் மூலம்... சமூக வலைத்தளங்களால் இந்தியாவில் முதன் மு தலாக ஆட்சியை இழக்க வைக்கப்பட்ட கட்சி என்றால் அது திமுகழகம் தான்...!
அது 2011 ஆம் ஆண்டு தேர்தலில்.... இத்தனைக்கும் தமிழக வரலாற்றிலேயே 2006 - 2011 ஆட்சி தான் தமிழகத்திற்கான பொற்காலம் என்று சொல்லலாம். அந்த ஆட்சியினை வழங்கிய தலைவர் கலைஞரை கிட்டத்தட்ட நம்பியார் அளவிற்கான வில்லனாகவே திமுக எதிர்ப்பாளர்கள் அப்பாவி பொது மக்களிடம் முன்னிறுத்தி அந்த வெற்றியினை ஈட்டினர்.
குறிப்பாக வெகு அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டான, 2ஜி மற்றும் ஈழத் தமிழர்கள் படுகொலை போன்றவற்றுக்கு திமுக மீது அபாண்டமாக பழி போட்டு, திமுகவின் சாதனைகளை மறக்கடித்து இந்த திராவிட ஆரியப் போரில் ஆரியம் வென்றது...!
ஆனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட திமுகழகமும், அதன் செயல் தலைவருமாகிய தளபதியார், இந்த சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தள செயல்பாடுகளில் காட்டிய அதீத கவனமானது, பல்லாயிரக்கணக்கான திமுக ஆதரவு இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் இப்படியாக இணையத்தில் செயல்பட்டவர்களை தானாகவே ஒன்றிணைய வைத்து....
ஒரு அதிகாரப்பூர்வமற்ற திமுகழக இணையதள அணி என்பது ஒட்டுமொத்த இணையதளத்தையும், குறிப்பாக சமூக வலைத்தளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து....
அந்த தோழர்களின் கடும் முயற்சியால், 2011இல் கடுமையான வில்லனாக சித்தரிக்கப்பட்ட தலைவர் கலைஞர்.... இன்றைக்கு எதிர் தரப்பில் இருந்தாலும் பிரதமர் மோடி உட்பட..... அன்றைக்கு ஆட்சியில் இருந்த போது ஒரு முறை கூட வந்து பார்த்திராத ராகுல் காந்தி வரையிலும்.... இன்னபிற வடக்கத்திய தலைவர்கள் வரையிலும் கூட தலைவர் கலைஞரை சந்தித்து ஆசி பெறும் நிலை உருவாகியிருக்கின்றது...!
தமிழக இளைஞர்கள் கூட கட்சி, சாதி, மதம் கடந்து தலைவர் கலைஞரை உயர் நிலையில் வைத்து மதிக்கின்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்த அளவிற்கு அவரது ஆட்சிக்கால சாதனைகள் ஆதாரங்களுடன் திரும்பத்திரும்ப பல்வேறு வழிகளில் பொது மக்களிடம் இந்த அதிகாரப்பூர்வமற்ற திமுகழக ஆதரவு இணையதள அணி தோழர்களால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றது.
2011இல் ஹீரோவாக முன்னெடுக்கப்பட்ட விஜயகாந்த் உண்மையிலேயே காமெடியன் தான் என்பதாகவும், வைக்கோ உள்ளிட்டவர்கள் மீண்டும் திமுக ஜோதியில் ஐக்கியமாக வேண்டிய நிலையும் கூட உருவாக்கப்பட்டது இந்த அணியின் பொது மக்களிடமான பிரச்சாரம் மட்டுமே என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை..!
1950களில் திமுகழகத்தினர் என்ற ஒரு பெரும் கூட்டம் கிடையாது. திமுக பேச்சாளர்கள் வீதியில் மேடை போட்டு பேசினால் அதைக் கேட்டவர்களில் 98 சதவிகிதத்தினர் பொது மக்கள்..... அந்த மேடைப் பேச்சுக்கள் அந்த பொதுமக்களை திமுகவினராக மாற்றியது. அதனால் படிப்படியாக வளர்ந்து 67இல் திமுக ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் இன்றைய திமுக பொதுக்கூட்டங்களில் மேடைப்பேச்சாளர்களின் பேச்சுக்களை கேட்பவர்கள் அனைவருமே திமுகவினர் தான் அவர்களிடம் திமுகவைப் பற்றிப் பேசி என்ன பயன்?! பொது மக்களிடம் சென்று திமுகவின் வாக்கு வங்கியைக் கூட்ட வேண்டும். இன்றைக்கு அந்தப் பணியைச் செய்வது திமுகழகத்தின் இந்த அதிகாரப்பூர்வமற்ற இணையதள அணி மட்டுமே..! இவர்கள் தான் தங்கள் நட்பு வட்டத்தில் இருக்கின்ற 5000 நண்பர்களில் 2000 பேர் திமுகவினராக இருந்தாலும், மீதமுள்ள 3000 பொது மக்களிடம் திமுக ஆதரவு கருத்துக்களை கொண்டு சேர்த்து திமுக வாக்கு வங்கியைக் கூட்ட முயன்று வருகின்றனர்.!
திமுகழகத்தின் செயல்தலைவர் பல்வேறு சமயங்களில் இவர்களை அழைத்து தானே நேரிலும், தன் பிரதிநிகளை வைத்து சில சமயங்களிலும் கலந்துரையாடி, அவர்களுக்கு முக்கியத்துவம் தந்து உற்சாகப்படுத்தியதன் விளைவே இவர்கள் செம்மையாக செயல்படவும்... பல்வேறு புதுப்புது நபர்கள் இந்த அணியில் தங்களையும் இணைத்து செயல்படவும் வைத்தது...!
இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2016 தேர்தலுக்கு முன்பாக டிவிட்டரில் பலமாக கால் பதித்த திமுக இணையதள அணியினர், பல்வேறு ஹேஷ் டேக்குகளை திமுகவுக்கு ஆதரவாக உருவாக்கி அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி தேசிய தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் பார்வையை திமுகழகத்தின் பக்கமாக ஈர்த்தனர்.
இந்த நிலையில் ஓராண்டுக்கு முன்னதாக திமுகவால் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட ஐடி விங் ஆனது.... இந்த ஆரம்பகால இணையதள பங்கேற்பாளர்களை புறம் தள்ளியதாக சலசலப்பு ஏற்பட....,
கழகத்தின் நலன் கருதி அதை கொஞ்சம் மனத்தாங்கலுடன் கடந்து செல்ல முயன்று அதில் பழகியும் விட்டிருந்த அந்த இணையதள அணியினர்....
ஐடி விங் ஆரம்பித்த #GoBackModi மற்றும் #GoBackAmithsha போன்றவற்றை உலக மற்றும் தேசிய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்க..... அது பாஜகவின் உச்சம் வரையிலும் சற்று அதிர்ச்சியடைய வைக்க....
அந்த சாதனையின் பலனை ஐடிவிங்கின் புதுவரவு ஒருவர் சொந்தம் கொண்டாட முயல... அதில் இணையதள அணியினர் கடும் கோபம் கொள்ள....
இந்த நிலையில் தான் தளபதியார் அவர்கள் லண்டன் சென்று திரும்பிய நிலையில் கடும் கோபத்தில் இருந்த பாஜகவினர்..., பழிக்குப் பழியாக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டர் டிரெண்டிங் ஆக்க முயல..., உடனடியாக சுதாரித்த திமுக இணையதள அணியினர் ஒன்றிணைந்து தங்களுக்குள் பல்வேறு வழிகளில் பேசி, ஒரே மணி நேரத்த்தில்...
#WelcomeStalin என்ற ஹேஷ் டேக்கினை டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கி பாஜகவினரை டரியல் ஆக்கினர். ஆனால் இதையும் ஐடி விங்கிங்கின் புதுவரவு தனது சாதனையாக முரசொலி மூலம் முன்னெடுக்க.....
யார் கண் பட்டதோ, இரண்டு நாட்களாக திமுகழக இணையதள செயல்பாட்டாளர்கள் இடையே சற்று பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
ஆனால் அனைவருமே திமுகழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள், தலைவர் கலைஞருக்கும்..... தளபதியாருக்கும் தன் இன்னுயிரைக் கூட ஈனக்கூடிய்வர்கள் என்பதால்.... எதிரிகள் நினைப்பது போது இந்த சிறு சலசலப்பும் கூட திமுகழகத்தினை சமூக வலைத்தளங்களில் முன்னெப்பொழுதையும் விட இன்னும் சிறப்பாக, புதுப் பொலிவுடன் செயல்பட வைத்து எதிரிகளை ஓட ஓட விரட்டும் என்பதை அடுத்த வாரத்திலேயே கூட நாம் காணலாம்...!
ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட தளபதியாரின் ஒரே ஒரு சிறு கடைக்கண் பார்வை ஒன்றே போதும்.... இந்த இணைய தள அணி ஒற்றுமையுடன் அதிக வலைமையுடன் தளம் காண புறப்பட்டுவிடும்...!
ஸோ.... விகடன், நியூஸ் 7 போன்ற திமுக எதிர்ப்பு ஊடகங்கள் ஜெலுஸில் பேரலை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக