மின்னம்பலம்: கலைஞர் சில தினங்களுக்கு முன்பு ’செக்கப்’ செய்வதற்காகக் காவேரி
மருத்துவமனைக்குச் சென்று ஒரே நாளில் வீடு திரும்பினார் !
கடந்த 15 நாட்களாகவே கலைஞர் சோர்வாகவே இருக்கிறார். படுக்கையிலிருந்து தூக்கி உட்கார வைத்தாலும், உட்காராமல் படுத்துக் கொள்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும், சில தகவல்களைச் சொல்லியே அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
மருத்துவமனைக்குப் போய்விட்டு வந்த பிறகு, ஸ்டாலின், செல்வி, தமிழரசு என நெருக்கமானவர்கள் வந்து கூப்பிட்டாலுமே ரெஸ்பான்ஸ் செய்யாமல் அமைதியாகவே இருக்கிறாராம் கலைஞர் .
.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக நாளுக்கு நாள் அவரது உடல் துவண்டபடியே இருப்பதை அருகிலிருந்து பார்ப்பவர்கள் கவலையோடு சொல்கிறார்கள். கோபாலபுரத்துக்கு வந்து கலைஞரை பார்த்த ஸ்டாலின், தனது உறவினர்களை உடனடியாக வீட்டுக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். ‘அவரு இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. வீட்டில் வைத்தே சிகிச்சை கொடுக்கலாமா... இல்லை மருத்துவமனையில் சேர்க்கலாமா?’ என்று கவலையுடன் கேட்டாராம்.
ஒவ்வொருவரும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின். கட்சியில் சில சீனியர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவர்களிடம் சில விஷயங்களைச் சொல்லி, எடப்பாடியிடம் பேசச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக