ஞாயிறு, 22 ஜூலை, 2018

சண்டையில் உயிரிழந்ததாக நினைத்து மாணவர் தற்கொலை!

private school 10th standard student suicide in thoothukudi district
tamil.samayam.com :கயத்தாறில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையில் நடந்த சண்டையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை கொன்றுவிட்டதாக நினைத்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையில் நடந்த சண்டையில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை கொன்றுவிட்டதாக நினைத்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 16ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில், நடந்த வாய்த்தகராறு அடிதடி சண்டையாக மாறியதில், ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


10ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையில், நடந்த மோதலில் ஒரு மாணவரை மற்றொரு மாணவர் கழுத்தைப் பிடித்து இழுக்கும் காட்சி பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர், கழுத்தைப் பிடித்த மாணவரை திரும்ப தாக்குகிறார்.

இந்த கோபமடைந்த அந்த மாணவர் தன்னை தாக்கிய மாணவரை ரெஸ்லிங் பாணியில், தலைக்கு மேல் தூக்கி தரையில் அடித்துள்ளார். இதில், அருகிலிருந்த பெஞ்சில் தலை மோதியதில் மயக்கமடைந்துள்ளார். இவரை மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது எந்த அசைவும் இல்லை. இந்த நிலையில், அந்த மாணவர் இறந்துவிட்டதாக நினைத்து பள்ளியின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து, வீடு திரும்பாத அந்த மாணவரை அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதற்கிடையில், மாணவர் பள்ளியின் அருகில் உள்ள கிணற்றில் மிதப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளியில் நடந்த சண்டையின் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதலில் போலீசார் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: