சென்னையில் உள்ள சைவத் தலங்களில் முக்கிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலாகும். இங்குள்ள புன்னை வன நாதர் ராகு கேது சிலைகள் மாயமானது.
மயில் வடிவில் சிவனை வணங்கும் புன்னை வன நாதர் சன்னதியில் உள்ள சிலை மற்றும் ராகு கேது சிலையில் சேதம் ஏற்பட்டிருப்பாகக் கூறி, அதனை மாற்றத் தலைமை ஸ்தபதி முத்தையா பரிந்துரை செய்துள்ளார். ஆனால் சிலைகளை மாற்றக் கூடாது என்று கோயில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பை மீறி இரவோடு இரவாக இந்த சிலைகள் மாற்றப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த சிலையில் மயில் வாயில் பூ மற்றும் லிங்கம் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது உள்ள சிலையில் மயில் வாயில் பாம்பு இருப்பது போன்று உள்ளது. இதையடுத்து, சிலைகள் மாயமாகியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிலைகள் மாயமானது பற்றி கோயில் நிர்வாகம் சார்பில் அறநிலையத் துறை அலுவகத்தில் அறிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சிலைகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தக் கோயில் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பழமையான சிலைகள் வெளிநாட்டில் விற்கப்பட்டுள்ளதாகப் புகாரும் எழுந்துள்ளது.
பழனி உற்சவர் சிலை வழக்கு முறைகேட்டில் ஸ்தபதி முத்தையா மற்றும் தனபால் கூட்டணிக்குத் தொடர்பு இருந்தது போல், கபாலீஸ்வரர் கோயிலிலும் சிலைகள் காணாமல் போனதில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக