ஞாயிறு, 22 ஜூலை, 2018

நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து! திருச்சி சிவாவின் கோரிக்கை ஏற்பு!


இந்த கோரிக்கையை வைத்தவர் திமுகவின் எம்.பி திரு .திருச்சி சிவா MA.BL பெண்கள் தினத்தன்று வாய்ப்பு கிடைத்தது ஒரு நிமிடம் ஆள் பலமில்லை, ஆனால் பெற்றது சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு.

நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து!மின்னம்பலம்:  சானிட்டரி நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி வரி நீக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான விவாதங்களுக்கும், பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஆலோசிக்கவும் ஜூலை 21ஆம் தேதி தேசியத் தலைநகர் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28ஆவது கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு இதுவரையில் விதிக்கப்பட்டு வந்த 12 சதவிகித வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலைக் கூட்டத்தின் முடிவில் டெல்லி துணை முதல்வரான மனிஷ் சிசோடியா செய்தியாளர்களிடையே தெரிவித்துள்ளார்.

சானிட்டரி நாப்கின்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கைகள் எழுந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் இந்த முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் 28 சதவிகித வரி வளையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சர்க்கரை செஸ் வரி குறித்து எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று மனிஷ் சிசோடியா கூறினார். தோல் பொருட்கள், மூங்கில், பெயின்ட், வார்னிஷ், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், வீடியோ கேம், சென்ட், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி ஏற்கெனவே இருந்த 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'ஜூலை 21ஆம் தேதி நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கான வரி குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜூலை 19ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருந்தோம்' என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: