ஞாயிறு, 22 ஜூலை, 2018

திருச்சியை நெருங்கும் காவிரி நீர்!’ - மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் .... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


காவிரி
காவிரிIndian Expres :மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என்பதால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டி வருவதால் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியவுடன் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது அணையின் முழுக்கொள்ளளவு எட்டியவுடன் நீர் திறக்கும் அளவு தற்போது இருப்பதை விட கூடுதலாக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள்ளது.
.vikatan.com-  சி.ய.ஆனந்தகுமார்</ என்.ஜி.மணிகண்டன் : கரூரைக் கடந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்தடைந்தது காவிரி நீர். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக முக்கொம்பு அணை திறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழையின் காரணமாகக் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை நிரம்பியது.
அதையடுத்து. கடந்த 19-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் சகிதமாகத் தண்ணீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையிலிருந்து 20,000 கன அடி காவிரி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், சேலத்திலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மலையனூரைக் கடந்து திருச்சி முக்கொம்புவை நெருங்கி வருகிறது.

காவிரி திருச்சி மாவட்டம் பேட்டவாய்த்தலை அருகே வந்துவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் காவிரி தண்ணீர் முக்கொம்புவை கடக்கும். இந்த நீரானது இன்று இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்டா பாசன விவசாயத்துக்காக நாளை காலை கல்லணையிலிருந்து காவிரி நீரானது திறக்கப்பட உள்ளது.

``திறந்து விடப்பட உள்ள காவிரி நீர் கடைமடை வரை செல்லும் வகையில், தமிழக அரசு விரைவாகக் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதே போல காவிரி நீரைத் தேக்கி வைக்க ஏதுவாகக் காவிரியின் நடுவே ஆங்காங்கே தடுப்பணைகள் மற்றும் கதவணைகளைக் கட்ட வேண்டும்.

அப்பொழுதான் காவிரி நீரை முழுமையாக நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்த முடியும்’’ என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: