புதன், 25 ஜூலை, 2018

லாவோஸ் நாட்டில் அணை உடைந்து விபத்து! -6,000 பேர் வீடுகளை இழந்தனர் பலரை காணவில்லை


விகடன்  :லாவோஸ் நாட்டிலுள்ள டேம் உடைந்ததில், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல்போயுள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
லாவோஸ் நாட்டின் அட்டபியூ மாகாணத்தில், நீர்மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணை ஒன்று கட்டப்பட்டுவந்தது. அந்த அணையைக் கட்டும் பணியை தென்கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்டுவந்தது. அந்த அணையின்மூலம் 2019-ம் ஆண்டு முதல் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென அந்த அணை உடைந்தது. அணை உடைந்ததில், 5 பில்லியன் கியூபிக் மீட்டர் நீர் அணையிலிருந்து வெளியேறியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், அணையை ஒட்டிய பகுதியிலிருந்த வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்தில் 6,600 பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர்.< நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயியுள்ளனர். மேலும், பலர் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தற்போது, மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

கருத்துகள் இல்லை: