வியாழன், 26 ஜூலை, 2018

பாகிஸ்தான் தேர்தலில் இந்து வேட்பாளர் வெற்றி! ...பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் எம்பி ஆனார்!

பொதுத்தேர்தலில் வென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குள் நுழைய உள்ள முதல் இந்துவெப்துனியா :பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தார்பார்கர் தொகுதியில் போட்டியிட்ட மகேஷ் மலானி, கீழ் சபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை பெற்றுள்ளார். #PakistanElection இஸ்லாமாபாத்:; பாகிஸ்தானில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும், அதிக இடங்களில் முன்னிலை வகித்தும் வருகிறது.
இதனால் இம்ரான்கான் பிரதமராக உள்ளதாக அறியவருகிறது.
  இந்நிலையில், சிந்து மாகாணத்தில் உள்ள தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அந்நாட்டு பாராளுமன்ற தேசிய சபை (கீழ்சபை) தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.


இதற்கு முன்னர், பல இந்து எம்.பி.க்கள் தேசிய சபையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நியமன எம்.பி.க்கள் ஆவர். தற்போது, மகேஷ் மலானி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தேசிய சபைக்குள் செல்ல இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: