சனி, 9 ஜூன், 2018

கொங்குப் கவுண்டர் சமூகம் பார்ப்பன அடிமையானது தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சேவையால்..

Thamizh Inian : பொதுவாகவே கொங்கு இனம்
பார்ப்பன வேத மத
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடந்த இருபது, முப்பது ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
80களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தான் பார்ப்பன ஆதிக்கத்தை கொங்கு இனத்தின் ஒரு பிரிவினரான கவுண்டர் சமூகம் அனுமதித்தது.
இதற்கு முழு முதற் காரணம் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தான்.
அவருக்கு இந்திய அளவில் வியாபாரம் செய்ய ஆர்.எஸ். எஸ் இன் தயவு தேவைப்பட்டது. அதனால் பார்ப்பனர்களை தஞ்சம் அடைந்தார்.
தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் ஊடுருவச் செய்தார்.
காலப் போக்கில் அது சமூகம் முழுவதும் பரவியது.
நா.மகாலிங்கத்தின் நிர்வாகப் பணிகளில் தன் சமூகத்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது போல் அளித்து அவர்களை அப்படியே ஆர்எஸ்எஸ் சிந்தனைக்குள்ளும்
சாதி வெறிக்குள்ளும் ஆழ்த்தினார்.

தீரன் சின்னமலை காலத்திலிருந்து பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்க மறுத்து கொங்கு மண்ணின் மாண்பைக் காத்து நின்ற தன் சமூகத்தை
தனது சொந்த லாப சுய நலனுக்காக பார்ப்பன அடிமைகளாக்கி சாதி வெறியர்களாக்கி
கவுண்டர் இன முன்னேற்றத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிய பெருமை பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தையே சாரும்.

மகாலிங்கத்தின் சுயநல சூழ்ச்சிக்கு இரையாகாமல் இருந்திருந்தால் இந்நேரம் கவுண்டர் சமூகம் நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் குடிமக்களாக மாறி முன்னேறியிருப்பார்கள்.
தான் பிறந்த சமூகத்தை முன்னேற்ற முயற்சித்த தலைவர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால்,
தன்னைத் தவிர தன் சமூகத்தில் வேறு யாரும் முன்னேறி விடக் கூடாது என்கிற நோக்கில் செயல்பட்டவர்கள் இரண்டே இரண்டுபேர்தான்....
ஒருவர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்...
இன்னொருவர்
செங்குட்டைப் பாளையம்
சி.சுப்பிரமணியம்.....
இவ்விரண்டு பேரும்
50 ஆண்டுகாலம்
தேசிய அரசியல் வரை கோலோட்சினர்....
ஆனால்,
தம் சாதி மக்களைப் பற்றிக்கூட கவலைப்படாமல்
அப்பட்டமான சுயநல வாழ்வை வாழ்ந்தவர்கள்.
இவர்களால்தான் கொங்குப் பகுதி கவுண்டர் சமூகம் பார்ப்பன அடிமையானது.
ஏதோ,
தோழர் தனியரசு போன்ற சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர்கள் எழுந்திருக்கிறார்கள்....
சாதியைக்கடந்த மைய நீரோட்டம் நோக்கி அந்த சமூகத்தை நகர்த்துகிறார்கள் இவர்கள் முயற்சியிலாவது
நமது
பழையகோட்டை அர்ஜூனன் அவர்களுடைய காலத்தைப்போல
கொங்கு வேளாள கவுண்டர் சமூகம்
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு,
சாதி ஆதிக்க வெறி உடைத்து,
சுயமரியாதை - சமதர்ம பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.
இந்து இல்லை எனச் சொன்ன கொங்கு இளைஞர் பேரவை தோழரைப் பாராட்டுவோம்....!

கருத்துகள் இல்லை: