ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்த
ஆண்டும் தனது ஊதியத்தை உயர்த்திக்கொள்ளாமல் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக
ரூ.15 கோடியைச் சம்பளமாகப் பெறவுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி சென்ற 2009ஆம் ஆண்டில் தனது ஊதியம் உயர்வு குறித்த விவாதம் எழுந்தபோது, ரூ.15 கோடியை மட்டுமே தான் சம்பளமாகப் பெறப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார். தனது பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக, பணியில் அதிக அக்கறை செலுத்துவதையும் ஊதியத்தைப் பெரிதாக நினைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தும் வகையில் அம்பானி இந்த முடியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டும், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ரூ.15 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெறப்போவதாக அம்பானி அறிவித்துள்ளார்.
அம்பானியின் ஊதியம் உயராத போதிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இதர ஊழியர்கள் மற்றும் இயக்குநர்களின் ஊதியம் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களான மேஸ்வானி சகோதரர்களின் ஊதியம் தலா ரூ.19.99 கோடியாக உயர்ந்துள்ளது. இவர்களின் ஊதியம் 2015-16 நிதியாண்டில் ரூ.14.42 கோடியாகவும், 2016-17 நிதியாண்டில் ரூ.16.58 கோடியாகவும் இருந்தது. 2014-15இல் ரூ.12.03 கோடியை இவர்கள் ஊதியமாகப் பெற்றனர். அதேபோல நிறுவனத்தின் செயலாக்க இயக்குநர்களில் ஒருவரான எஸ்.பிரசாத்தின் ஊதியம் ரூ.7.87 கோடியிலிருந்து ரூ.8.99 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக