திங்கள், 4 ஜூன், 2018

நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி

மாலைமலர்:  நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவீதம் மட்டுமே  தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தைச்
சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள cbseresults.nic.in என்ற தளத்தில் சி.பி.எஸ்.இ. வெளியிடப்பட்டது. 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இயற்பியலில் 180-க்கு 171, வேதியியலில் 180-க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360-க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: