செவ்வாய், 5 ஜூன், 2018

நீட் தேர்வால் ரூ.100 கோடி லாபம்.. சிபிஎஸ்இ மகிழ்ச்சி..


பரீட்சை மண்டபத்தில் விடை தாளை ஜன்னலால்
2018 வசூல் நிலவரம்
tamil.goodreturns.in - Tamilarasu ; மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் வசூல் மூலம் 100 கோடி ரூபாய் வரை சிபிஎஸ்இ லாபம் பார்த்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்ததில் இருந்து தெரிய வந்துள்ளது.
கட்டணம் தேசிய அளவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் நடைபெறும் நிலையில் அதற்கான கட்டணம் பிற தேர்வுகளைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும்.
ஓசி மற்றும் ஓபிசி வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1,400 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் 750 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும் 2018-ம் ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அதில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் 2.60 லட்சம் நபர்கள்.,, 2017-ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ 145 கோடி ரூபாயினை விண்ணப்ப கட்டணமாக வசூலித்து 40 கோடி ரூபாயினை மட்டுமே செலவு செய்துள்ளது. மீதம் உள்ள 105 கோடி ரூபாய் லாபம் எனத் தெரியவந்துள்ளது.




2018 வசூல் நிலவரம்

2018-ம் ஆண்டு நீட் விண்ணப்பங்கள் மூலம் 168 கோடி ரூபாயினைச் சிபிஎஸ்இ வசூலித்த நிலையில் அதற்கான செலவுகள் குறித்த விவரங்களை அளிக்கவில்லை.



 கோரிக்கை

கோரிக்கை

இவ்வளவு லாபம் பார்க்கும் சிபிஎஸ்இ ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்ப கட்டணத்தினைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.



நீட் தேர்வில் தோல்வியா கவலை வேண்டாம்?

தமிழக மானவர்கள் நீட் தேர்வில் குறைந்த அளவில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற கவலை வேண்டாம். இந்த வருடம் நீட் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தாலும் அடுத்த வருடத்திலும் நீட் தேர்வினை எழுத முடியும். வட இந்திய மாணவர்களுள் பலர் இது போன்று 12 -ம் வகுப்புத் தேர்வினை முடித்த பிறகு ஒரு வருடம் வரை நீட் தேர்வுக்கான பயிர்ச்சியைப் பெற்று மீண்டும் முயற்சிக்கின்றனர்.



ஒரு வருடம் வீண் என்ற கவலை வேண்டாம்?

இந்த ஒரு வருட இடைப்பட்ட காலத்தில் அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்விற்குப் பயிற்சி எடுப்பது மட்டும் இல்லாமல் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஒரு வருட, 6 மாத டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம்.

கருத்துகள் இல்லை: