வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவல் |
மோடி, அஜீத் தோவல் |
சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் |
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, கேபினட் செயலாளராக தற்போது பணியாற்றிவரும் பி.கே சின்ஹாவுக்கு இரு வாரங்களுக்கு முன் பணி நீட்டிப்பு வழங்கப்படும்வரை ஹஸ்முக்தான் அப்பதவிக்கு அடுத்து வருவார் என அனைவராலும் பேசப்பட்டவர். சின்ஹாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் தகவலை அறிந்த ஹஸ்முக் அதியா மே 5-ம் தேதி, நிதி அமைச்சகத்தை பணியாளர் பற்றாக்குறையுடன் விட்டுவிட்டு, வழக்கத்திற்கு மாறாக நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓய்வில் இருந்தார்.
வருவாய்துறையின் செயலாளராக முக்கிய பதவியில் இருந்தபோது ஹஸ்முக் அதியா ஒரு அநாமதேய தொழிலதிபரிடமிருந்து தீபாவளி பரிசாக தங்க கட்டிகளைப் பெற்றார் என்றும் அவருக்கு யார் லஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும் த ஒயர் இணையதளம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கினறார். தனக்கு எந்த சூழ்நிலையில் அந்த அநாமதேய பரிசு வழங்கப்பட்டது என மோடிக்கு அதியா விளக்கமளித்தார். இதையடுத்து பிரதமர் மோடி, நிதியமைச்சர் ஜெட்லி உடல்நலக் குறைவாக இருந்தபோது நிதியமைச்சகத்தின் சாவிகளை அவரிடம் கொடுத்து, அவர் மீதான தனது நம்பிக்கையை நீட்டித்தார்.
ஆயினும், சின்ஹாவுக்கு பணி நீட்டிப்பு கொடுத்தது இரண்டு பேட்ச்-களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தாங்கள் விரும்பிய அந்த குடிமைப்பணியின் (சிவில் சர்வீஸ்) தலைமை பதவியை அடைய முடியாமல் செய்துள்ளார் மோடி. அப் பதவிக்கு போட்டியிட்டவர்களில் ஒருவர் இதுபற்றி கூறுகையில், ”தனக்கு சிறப்பு விசுவாசத்தை உறுதிபடுத்திய ஒரு சதிக்கூட்டம் தனக்கு தேவை என பிரதமர் நம்புகிறார். அதிகார வர்க்கம் அப்படி வேலை செய்வதில்லை. தனக்கு விருப்பமான பிடித்த அதிகாரிகள் என வருகிறபோது விதிகளை பிரதமர் மோடி தூக்கி எறிந்ததால் அனைவரும் வருத்தமடைந்துள்ளனர்” என்றார்.
மற்ற “Gujarat-Modified officials” எனப்படும் மோடிக்கு விசுவாசமான குஜராத் அதிகாரிகளைப் பற்றி பார்ப்போம். ரீட்டா தோட்டியா தற்போது வர்த்தக செயலாளர். தபன் ரே கார்ப்பரேட் விவகாரங்களுக்கான செயலாளர். குஜராத் கேடர் அதிகாரிகளைக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை மோடி நிரப்பியிருக்கிறார். அர்விந் குமார் இணைச் செயலாளர் மற்றும் ராஜீவ் டோப்னோ மோடியின் தனிச் செயலாளர் ஆகியோரும் குஜராத்தை சேர்ந்தவர்களே. சஞ்சய் பாவ்ஷார் மற்றும் ஹிரென் ஜோஷி ஆகியோர் சிறப்பு பணி அதிகாரிகளாக உள்ளனர்.
இவர்களின் மிகவும் மூத்த அதிகாரி பிரதமருக்கான கூடுதல் செயலாளர் மிஸ்ரா. மிஸ்ராதான், அனைத்து முக்கிய அதிகாரிகள் நியமனத்தை முடிவு செய்யும் நியமனங்களுக்கான குழுவை (Cabinet Committee on Appointments). முடிவெடுக்கும் அனைத்து அதிகாரங்களையும், பிரதமர் அலுவலகமே வைத்துள்ளதால், மிஸ்ரா மிகவும் சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படுகிறார். மோடியின் “கண்களும் காதுகளுமாக” மிஸ்ரா தலைமைச் செயலக வட்டாரத்தில் கருதப்படுவதால் மிஸ்ராவைக் கண்டு மூத்த அமைச்சர்களும் கூட பயப்படுகிறார்கள்.
மத்திய கல்வி வாரியத்தின் தலைவரான அனிதா கர்வால் மற்றும் ஊழியர் தேர்வுக்குழு ஆணையர் ஆஷிம் குரானா ஆகிய குஜராத் கேடர் அதிகாரிகளின் செல்வாக்கை இப்போது பார்ப்போம்.
அனிதா கர்வால் தலைவராக இருந்தபோதுதான் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் கேள்வித்தாள்கள் லீக் ஆயின. அதேபோல, SSC வினாத்தாள் லீக் ஆனதுபோது குரானா தலைவராக இருந்தார். இந்த இரு கசிவுகள் மீது தேசிய அளவில் சீற்றம் எழுந்தபோதும், இந்த இரு குஜராத் கேடர் அதிகாரிகளும் பிரதமர் மோடியுடன் நேரடி தொடர்பில் இருப்பது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிவதால் அவ்விரு அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அரசியலமைப்பு அமைப்பின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஏ.கே. ஜோதி. பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட குஜராத் கேடர் அதிகாரி ஆவார். அவரது செயல்கள் அவருக்கு நீதித்துறையின் கடும் கண்டனங்களைப் பெற்றுத் தந்தன.
குஜராத் ஆளுமை பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. ஜி.சி. முர்மு, நிதி சேவைகள் கூடுதல் செயலாளர்; அனில் கோபிஷங்கர் முகிம், சுரங்கத் துறை செயலாளர், ராஜ்குமார், ஊழியர்களின் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், தலைமை நிர்வாக அதிகாரி, அதனு சக்ரவர்த்தி, , ஹைட்ரோகார்பன்கள் டைரக்டர் ஜெனரல், ஆகிய பெயர்கள் அந்த நீண்ட பட்டியலில் சில.
குஜராத் கேடரைச் சேர்ந்த இந்திய காவல் பணியைச் சேர்ந்த ஐ.பி.எஸ் (IPS) அதிகாரிகளை தனது “கண்களாகவும்“, ”காதுகளாகவும்” மோடி பயன்படுத்தி வருவதால், மோடியின் கீழ், அவர்களும் நினைத்ததை, விரும்பியதை அனுபவித்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா கடந்த ஆண்டு CBI எனப்படும் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். தேசிய நுண்ணறிவு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏ.கே.பட்னாயக்-கும், சி.பி.ஐ. இணை இயக்குனராக பிரவின் சின்ஹா-வும் நியமிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான மற்றொரு போலீஸ் அதிகாரியான ஒய்.சி. மோடி நேஷனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்ஸி எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மோடி 2014ம் ஆண்டு மேற்கொண்ட தனது வெற்றிகரமான அமெரிக்க பயணத்தின்போது நியுயார்க் நகரில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற ராக்ஸ்டார் வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்தவரான முன்னாள் வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்-க்கு ஒரு வருட கட்டாய “கூலிங் ஆஃப்“ காலத்தை தள்ளுபடி செய்து அவர் டாடா குழுமத்தில் உலக பெரு நிறுவன விவகாரங்கள் தலைவராக சேரலாம் என்றதன் மூலம் பிரதமர் மோடி தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளுக்கு வழக்கமான சாதாரண பணி விதிகள் (சர்வீஸ் ரூல்ஸ்) பொருந்தாது என நம்புகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
ஏற்கெனவே 2017ல், ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டார். தனது பதவி நீட்டிப்புக் காலம் முடிந்த சில மாதங்களிலேயே அவர் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அந்த கார்பொரேட் குழுவின் பாதுகாப்பு களமாக அவர் இவர் இருப்பார் என நம்பப்படுகிறார். ஜெய்சங்கருக்குக்காக விதிகள் புறந்தள்ளப்பட்டதால் சில அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். முக்கியமாக, பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் அவரது ஜுனியர்கள் வெளியுறவு செயலாளர் பதவிக்கு வரமுடியமால் தடுக்கப்பட்டுள்ளது. ”ஏன் இந்த விதிகள் மற்றும் கால அவகாசம் எல்லாம்?”. இதுபோன்ற உயர்ந்த மதிப்புமிக்க பதவிகள் எல்லாம் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிக்கட்டும்” என கடுப்புடன் கூறுகிறார் முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர்.
பிரதமராக பதவியேற்ற உடனேயே, நிருபேந்திரா மிஸ்ரா என்பவரை முதன்மைச் செயலாளராக நியமிக்க மோடி ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்மூலம், தற்போது பணிபுரிந்து வரும் இருந்து வரும் அதிகாரி எவரும் அந்த பதவிக்கு லாயக்கு இல்லை என்ற தனது எண்ணங்களை தெளிவுபடுத்தி விட்டார். இவரைத் தொடர்ந்து, அஜித் தோவல் என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். “நாகா உடன்படிக்கை“ முதல் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பை பத்தான்கோட் அழைத்தது வரை சிறு விஷங்களைக்கூட நிர்வகிக்க முடியாமல் தோவல் தவறாக கையாண்டார். ஆனால், நேபாளம் நமக்கு விரோதமானதாகட்டும், அணுசக்திக் குழுவில் இந்தியா இணையும் முயற்சி வெற்றி பெறாதாகட்டும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை தவறாகக் கையாண்டதாகட்டும், அண்மையில் டோக்லம் நிலைப்பாடாகட்டும், இதில் எதிலும் தவறிழைத்ததற்கான பொறுப்பு தன் தலையில் சுமத்தப்படாமல், தோவல் தப்பித்து வருகிறார்.
எந்த தோல்வியிலும் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டதற்கு டோக்லம்தான் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், விசுவாசம் என்ற ஒரே காரணத்தினால் அவரை பிரதமர் மோடி அவரை விடாமல் வைத்திருக்கிறார்.
ஐபிஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், டோக்லம் ஆர்.எஸ்.எஸ்-ன் விவேகானந்தா அறக்கட்டளையை நடத்தி வந்தார் தோவல். மன்மோகன் சிங் அரசாங்கத்தை மண்டியிடச் செய்த அண்ணா ஹஸாரே இயக்கதை வழி நடத்திய பெருமைக்குரியவர்.
மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு பல முக்கிய விஷயங்களில் தோவல் ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. குஜராத்திலும் அவர், அதிகாரப்பூர்வமற்ற முறையில், மோடியோடுதான் இருந்தார். அவரது மகன் ஷௌரியா டோவல் பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் உடன் இணைந்து இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயல்வே அமைச்சர் பியுஸ் கோயல், அமைச்சர்கள் சுரேஷ் பாபு, ஜெயந்த் சின்கா மற்றும் எம்.ஜே.அக்பர் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.
தனக்கு விசுவாசமான அதிகாரிகளுக்கு அவர்களது நல்ல மற்றும் கெட்ட தருணங்களின்போது மோடி ஆதரவாக உள்ளார் என அறியப்படுகிறது. அமைச்சரவை செயலாளராக முடியவில்லையே என்ற வருத்தத்தில் அதியா இருந்தாலும் நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர், அவருக்காக மோடி பிரதமர் அலுவலகத்தில் ஒரு வேலை தயாராக வைத்துள்ளார். அதேபோல, NIA-வின் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி அண்மையில் அவரது ஒப்பந்தம் முடிவடைந்த சரத்குமார், அனேகமாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய முக்கியமான வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என மூத்த அதிகாரிகள் தெரிவித்தாலும், முக்கிய பதவிகளில் உள்ள மோடிக்கு விசுவாசமான அதிகாரிகளுக்கு இந்த கடுமையான விதிகள் பொருந்தாது.
ஸ்வாதி சதுர்வேதி
நன்றி தி வயர் இணையதளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக