திங்கள், 18 ஜூன், 2018

மேதா பட்கர் தூத்துக்குடியில் நேரடி ஆய்வு ,

மேதா பட்கர் தூத்துக்குடி வருகை!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களைச் சந்திக்க சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் இன்று(ஜூன்18) தூத்துக்குடிக்கு வருகைதந்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த மேதா பட்கரை மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகிகளும் பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரும் அழைத்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடுப்பங்களை சந்திக்கஉள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம் ஒன்றில் பேச உள்ளதாகவும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால், ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல்பாதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடி வந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட்ஆலையை மூட வலியுறுத்தி போராட்டத்தின் 100ஆவது நாளில் பொதுமக்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜூன் 22 ஆம்தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது திடீரென காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்ததுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போராடிய மக்களைச் சந்திக்க சமூகஉரிமைப் போராளி மேதா பட்கர் இன்று தூத்துக்குடி வந்துள்ளார்.
நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக, 'நர்மதா பச்சாவோ அந்தோலன்' என்ற அமைப்பினை உருவாக்கிபோராட்டம் நடத்தியர். இவர் தொடர்ந்து நாடு முழுவதும் எழும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: