சனி, 23 ஜூன், 2018

காஷ்மீரில் குறிபார்த்து சுடுபவர்கள் - ஸ்னைப்பர் - வீரர்கள் குவிப்பு

ஸ்னைப்பர் வீரர்
Chinniah Kasi : ஸ்ரீநகர், ஜூன் 22- ஆளுநர் ஆட்சி அமலாக்கப்பட்டுள்ள ஜம்மு - செல்லும் ரேடார் கருவிகள் உட்பட, நவீன போர் கருவிகள் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஜயகுமார் ஐ பி எஸ்
காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தசிறப்பு கமாண்டோ படையினர், அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஸ்ரீநகர் அருகே உள்ள எல்லைபாதுகாப்பு படையின் முகாமில், கடத்தல் மீட்புஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் அதிநவீன துப்பாக்கிகள், கட்டடங்களை ஊடுருவிச்
குடியிருப்புப் பகுதியிலும்  ஊடுருவி துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன்பெற்ற ஹெச்ஐடி கமாண்டோபடையைச் சேர்ந்த சுமார்12 ஸ்னிப்பர் வீரர்கள் கடந்த 2 வாரங்களாக அங்கு பயிற்சியில் இருக்கின்றனர். தேவையேற்படும் சூழலில் அந்த எல்லைப் பாதுகாப்புப்படையினர் முகாமில் சுமார் 100 என்எஸ்ஜிகமாண்டோ படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
விமானக் கடத்தல் தடுப்பிலும் அவர்கள்திறன் பெற்றுள்ளதால், விமான நிலையத்துக்குஅருகே அவர்களுக்கு முகாம் அமைக்கப் பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, ராணுவ வீரர்கள் தரப்பில், உயிர்சேதங்களை தவிர்ப்பதற்காக, என்எஸ்ஜிகமாண்டோ வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விரைவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனிடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலம்அனந்த்நாக் அருகே குப்வாரா பகுதியில்பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வெள்ளியன்று காலை வந்ததகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாகவும், மேலும் ஒரு பயங்கரவாதியை தேடிவருவதாகவும் தகவல் வெளி்யாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: