புதன், 20 ஜூன், 2018

எஸ் வி சேகருக்கு ஜாமீன் கிடைத்தது .. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில்


மாலைமலர்: பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர்
எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னை: பா.ஜனதா கட்சி பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக வெளியிட்டிருந்த கருத்து கடும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எஸ்.வி. சேகர் மீது சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள அல்லிகுளம் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எஸ்.வி.சேகர் இன்று காலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கியது.
மேலும், ஜூலை 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தது./> பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எஸ்.வி.சேகர் ஆஜரானதால், கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: