tamil.oneindia.com- Mathi ;சீனா :
சர்வதேச அமைப்புகள் பல கண்டனங்களும்
எதிர்ப்புகளும் தெரிவித்த போதும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கனஜோராக சீனாவின் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெற்று வருகிறது.
சீனாவின் யூலினில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமாண்ட நாய்க்கறி திருவிழா நடைபெறும். நாளொன்றுக்கு சுமார் 1,000 நாய்கள் இறைச்சிக்காக கொல்லப்படும். இத்திருவிழா காலத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன. இத்திருவிழாவையொட்டி 'நாய் கடத்தல்'களும் நடந்தேறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந் நாய்கறி திருவிழாவுக்கு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் கடந்த 19-ந் தேதி முதல் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.
நம்பிக்கை சார்ந்த நாய் பலியிடுதலும் இத்திருவிழாவின் போது நடத்தப்படுகிறது. வரும் 30-ந் தேதி வரை நாய்க்கறி திருவிழா நடைபெறும்சீனாவில் கோடை காலத்தில் நடக்கும் நாய்க்கறித் திருவிழாவில் சுமார் ஆயிரக்க்கணக்கான நாய்கள் பலியிடப்படுகின்றன.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக்கில் நாய்க்கறித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த விழாயக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதி வரை இவ்விழா நடைபெறும். இத்திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். அவற்றை வாங்குபவர்கள் அங்கேயே அவற்றை வெட்டி தீயில் வாட்டி இறைச்சியாக உண்பார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக