vikatan - மலையரசு:
டிடிவி தினகரனின் ஆதரவு
எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் மூன்றாவது
நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இல்லை; அவரை மாற்ற வேண்டும் எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் நீதிமன்றத்தை நாட வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இதனையடுத்து மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்படும் என்றும் அதுவரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால் 18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் மேலும் சில காலத்துக்கு இழுத்தடிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நீதிபதி விமலா கடலூர் மாவட்டம் வீராணநல்லூரைச் சேர்ந்தவர். கடந்த 2010 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது, குடும்பநல நீதிமன்றங்கள், விடுமுறை காலத்திலும் இயங்குவதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தி வெற்றிகண்டது உள்ளிட்டவற்றைச் செய்தார். பின்னர் 2011ம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக