திங்கள், 18 ஜூன், 2018

உத்தர பிரதேசம் பாஜகவின் வாட்டர் லு .. சோனியா + மாயாவதி + அகிலேஷ் அட்டகாசமான கூட்டணி ..

சவுக்கு :2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில்
போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு
மிகவும் நம்பகமான அடையாளம்,   மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு கடுமையாக போட்டியிட்டவர்கள்/.
2007-ம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மை பெற்றது. மாயாவதி நான்காவது முறையாக முதலமைச்சராவதற்கு இது வழிவகுத்தது.. 2012ல் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெற்றது. அகிலேஷ் முதலமைச்சர் ஆனார். அதற்கு முன்னர், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மூன்று முறை அப்பதவியை வகித்துள்ளார். கடந்த ஆண்டு, மிச்ச மீதமுள்ள மோடி அலையை பயன்படுத்தி, பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. 15 வருடகால இடைவெளிக்குப் பிறகு, ஆதித்யநாத் என்ற ஒரு முதலமைச்சரை பாஜக பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது. மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜகவுக்கு 71 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்திற்கு மேலும் இரண்டு இடங்களையும் அம் மாநிலம் வழங்கியது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டிகளிலிருந்து பாஜக பெரியளவில் பயனடைந்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 42.63% ஆகும். இது சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜக் கட்சி ஆகியவற்றின் மொத்த வாக்கு சதவீதத்தைவிட (42.13%) கொஞ்சம் கூடுதலாகும்.

அதன் 22.36% வாக்குகளுடன், சமாமஜ்வாடி கட்சி  ஐந்து இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 7.53 சதவீத வாக்குகளைப்பெற்று, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 19.77% வாக்குகளைப் பெற்றது. ஆனால், ஒரு தொகுதியைக்கூட  பெறவில்லை. பூஜ்யம் இடங்களைப்பெற்ற ஒரே ஒரு அங்கீகரிக்கப்பட்டட தேசியக் கட்சியாக அது இருந்தது. கூட்டணியே வைக்கக்கூடாது என்பதையே  ஒரு விதியாக கொண்டிருந்த மாயாவதியை அவரது கட்சியின் உத்தியை மறுபரிசீலனை செய்ய இந்த அனுபவம் தூண்டியிருப்பதாகத் தெரிகிறது.
பா.ஜ.க.வும் அதன் தோழமை கட்சியும் 20 தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகளில் 40 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன. 37 இடங்கிளில் 40-50 சதவீத வாக்குகள் பெற்றன. 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற 16 இடங்களில் பல, மோடி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், ஆதித்யநாத், மேனகா காந்தி மற்றும் நடிகை ஹேமாமாலினி போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்றவையாகும். மற்ற சிலர் வகுப்புவாதத்தின் அடிப்படையில் வன்முறை உருவாக்கப்பட்ட முசாபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த 16 இடங்களில், கோரக்பூர் மற்றும் கைராணா தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் வெற்றிகள்,  2014-ல் பாஜக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த இடங்களில்கூட ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்புத் தாக்குதல்களைத் தாங்கிக்கொள்ள முடியாது என்பதையே காட்டுகின்றன.
எதிர்க்கட்சி ஒற்றுமை இடைத்தேர்தல்களில் வெற்றியடைய எளிதாக இருந்தது. தேர்தலில் போட்டியிடாத பகுஜன் சமாஜ் கட்சி கோரக்பூர் மற்றும்  புல்பூரில் சமாஜ்வாடி கட்சிக்கும், கைராணாவில் ராஷ்டிரிய லோக் தள் கட்சிக்கும் ஆதரவளித்தது.

பகுஜன் சமாஜ் கட்சி உருவான காலத்தில் இருந்தே, அது நாடு முழுவதும் பரந்த அளவில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆரம்ப கட்டத்தில், ஒரு சில வடமாநில தொகுதிகளில் ஒரு அடையாளத்தை உருவாக்க முடிந்தது. பின்னர் அதன் செல்வாக்கு உத்தரப்பிரதேசத்தோடு சுருங்கியது, ஆனாலும்,  அது நாடு முழுவதும் வேட்பாளர்களை தொடர்ந்து நிறுத்தியது. அதன் வேட்பாளர்களில் பெரும்பாலோர் தங்கள் டெபாசிட் தொகைகளை இழந்த போதிலும், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த விதிகளின் அடிப்படையில் ஒரு தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
சில அடையாளச் செயல்களைத் தவிர, 2019 தேர்தல்களுக்கு முன்னால் எதிர்த்தரப்பு ஒற்றுமையை உருவாக்க உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சில பிராந்தியக் கட்சிகள் கூட்டாட்சி முன்னணியைப் பற்றி பேசுகின்றன. கர்நாடகாவில் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி புரிந்துணர்வு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்கொள்ள ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்பை கொண்டுவர இன்னும் நிறைய வேலைகள் தேசிய மற்றும் மாநில அளவில் செய்யப்பட வேண்டும்.
கட்சிகள் இந்த விவாதத்தை பகுத்தறிவு ரீதியாக அணுகினால், இடங்கள் ஒதுக்குவது ஒரு பிரச்சினையே அல்ல. 2014-ம் ஆண்டு பெற்ற வாக்குகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டு இடங்களை ஒதுக்குவதற்கு ஒரு தோராயமான விதியை உருவாக்க வேண்டும். அடுத்தடுத்த இடைத்தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு கட்சியின் பலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டினால், இந்த விதியில் மாற்றத்தை உருவாக்கலாம்.   அனைத்து சிக்கல்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும்.
உத்தரப் பிரதேசத்தில், மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியை விட சமாஜ்வாடி கட்சி முன்னிலையில் இருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 22.23% வாக்குகளுடன், சமாஜ்வாடி கட்சியை விட  ஒரு சிறப்பான நிலையில் இருந்தது.   சமாஜ்வாடி கட்சிக்கு  21.82% வாக்குகள் மட்டுமே  கிடைத்தன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வளர்ந்த கட்சிகள் என, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நீண்டகால காங்கிரஸ்-எதிர்ப்பு பாரம்பரியம் கொண்டவை. எனினும், தற்போது  ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அரசியலமைப்புக் கொள்கைள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. எந்தவொரு விலை கொடுத்தாவது அவை   பாதுகாக்கப்பட வேண்டும் என இந்த மூன்று கட்சிளும் ஒத்துக்கொண்டிருப்பதால், இக்கட்சிகளிடையே ஒரு இணக்கம் ஏற்பட்டள்ளது.
தற்போது அவையில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளுக்கு அதே இடங்களைக் கொடுப்பதும், கடந்த தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற கட்சிகளுக்கு மற்ற இடங்களை ஒதுக்குவதுமே உத்தரப் பிரதேசத்தில் தொகுதிகள்-பகிர்வுக்கு ஒரு நியாயமான சூத்திரமாக இருக்கும்.
இந்த சூத்திரத்தின் முதல் பகிர்வின்படி, சமஜ்வாடி கட்சி (இடைத்தேர்தலில் வென்ற இரண்டு இடங்கள் உள்பட) தற்போது வைத்திருக்கும் ஏழு இடங்களைப் பெறும். காங்கிரஸ் கடந்த முறை வென்ற இரு இடங்களையும்,   ராஷ்டிரிய லோக் தள் கட்சி அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில்  பாஜகவிடமிருந்து பறித்த இரண்டு இடங்களையும் பெறும். இரண்டாவது பகிர்வின்படி, பாஜகவுக்கு மிக நெருக்கமான போட்டியாளராக இருந்த பகுஜன சமாஜ் கடசி 33 இடங்கள், சமாஜ்வாடி கட்சி 30 இடங்கள், காங்கிரஸ் ஆறு இடங்கள் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி ஒரு இடம் என பகுஜன் சமாஜ் கட்சி 33 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி 37 இடங்களையும், காங்கிரஸ் எட்டு இடங்களையும் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி இரண்டு இடங்களையும் பெறவேண்டும்.
இது இறுதியான பகிர்வு கிடையாது.  பேச்சுவார்த்தைகள் மூலம் பொருத்தமான வகையில் மாற்றக்கூடிய அடிப்படை கட்டமைப்பாக இது பார்க்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களை கேட்கலாம். பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகிய இரண்டுமே மற்ற மாநிலங்களில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கும் கட்சிகளாகும். மற்ற மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களுக்கான ஆதரவை ஈடாகப்பெற,          உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் சிக்கலாக இருக்காது

கர்நாடக தேர்தலில் எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான மாயாவதியின் தேர்தல் கூட்டணி, அதற்கு ஒரு தென்னக மாநிலத்தில் முதல் எம்.எல்.ஏவைப் பெற்றுத்தந்தது. இன்று அம்மாநில கூட்டணி அரசாங்கத்தில் அவர் ஒரு அமைச்சராக இருக்கிறார். இது பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு திருப்பு முனையாகும். இதுபோன்ற வாய்ப்புகளை வேறு இடங்களில் தேட இது மாயாவதியை ஊக்குவிக்க வேண்டும்.
சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் தள் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தல்களிலும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் 33 அல்லது 34 இடங்களை ஏற்றுக்கொண்டு மற்ற பிற இடங்களை காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளுக்கு ஒதுக்கினால் புதிய மக்களவையில் பாஜகவின் பலத்தை கடுமையாக கட்டுப்படுத்தவும், தங்களது நிலைப்பாட்டை மேம்படுத்தவும் முடியும்.
பிஆர்பி.பாஸ்கர்
நன்றி தி வயர் இணையதளம்

கருத்துகள் இல்லை: