BBC : நாட்டிங்ஹாமி ன் ட்ரெண்ட் பிரிட்ஜ்
மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில்
இங்கிலாந்து 50 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்து தனது முந்தைய உலக சாதனையை
முறியடித்துள்ளது.>இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ்
அதிகபட்சமாக 92 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதத்தைக்
கடந்த இன்னொரு வீரரான ஜானி பைர்ஸ்டோ 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்பு 2016இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்திருந்ததே முந்தைய உலக சாதனையாக இருந்தது. அந்தப் போட்டியும் இதே மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிய 27 பந்துகள் இருக்கும்போதே, 45.3 ஓவர்களில் 446 ரன்களை அடைந்தபோது முந்தைய உலக சாதனை முறியடிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடைசி நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது மூன்றாவது போட்டியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக