tamil.oneindia.com- kalai-mathi:
கத்தி, அரிவாள் உடன் வலம் வரும் மாணவர்கள்-வீடியோ
சென்னை: முதல் நாளே கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களின் ரகளையில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து தினம் கொண்டாடுவது, ரூட் தல யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சகமாணவர்களுடன் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் கத்திய, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக
பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே தான்
மோதல் சம்பவம் அதிகமாக உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலான கோடை
விடுமுறைக்கு பிறகு கல்லூரி வகுப்புகள் இன்று தொடங்கின.
பஸ்,
ரயில்களில் புறநகர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்களது முதல் நாள்
பயணத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் ரகளைகளில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடனேயே பயணம் செய்தனர்.
திடீரென
அவர்களை சுற்றி வளைத்த போலீஸார், மாணவர்கள் 50 பேரை பிடித்தனர். இதில்
நந்தனம் கல்லூரி மாணவர்கள் 33 பேர், மாநில கல்லூரி மாணவர்கள் 13 பேர்
பிடிபட்டுள்ளனர். பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரும்
சிக்கியுள்ளனர்.
பிடிபட்ட
50 மாணவர்களிடம் கத்திகள், கோடாரிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீஸார் எச்சரிக்கையும் மீறி கல்லூரி தொடங்கிய
முதல் நாளில் பேருந்தில் மாணவர்கள் ரகளை ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
பயங்கர
ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பேருந்துகளில் ரகளையில்
ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் கல்லூரி மாணவர்களின் ரகளையில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து தினம் கொண்டாடுவது, ரூட் தல யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சகமாணவர்களுடன் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் கத்திய, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களிடையே மோதல்
பாதுகாப்பு பணியில் போலீசார்
இதனை அறிந்த போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக