சென்னை: திருவாரூரில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் பொதுக் கூட்டத்தை
கலைஞர் லைவ்வாக பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
கலைஞர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி
திருவாரூரில் பிறந்தநாள் வாழ்த்தரங்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
Karunanidhi watches Tiruvarur Birthday function meeting in live
இதில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இந்த
விழாவில் பேசிய தலைவர்கள், 95 மட்டுமல்லாமல் 100-ஆவது ஆண்டையும்
கொண்டாடுவோம் என்று வாழ்த்தினர்.
ஸ்டாலின் பேசுகையில் இந்த விழா பாராட்டுவதற்காக எடுக்கப்படும் விழா அல்ல.
திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக் காத்து, எங்களிடம்
ஒப்படைத்துள்ளதால் எடுக்கப்படும் விழா. இங்கு பேசிய அனைவரும், எங்களுக்கும்
அவர் தான் தலைவர் என்று குறிப்பிட காரணம் சமூக நீதியை கட்டிக்காத்ததுடன்,
மத நல்லிணக்கத்தை பேணியவர் கலைஞர் என்பதால்தான் என்றார்.
இந்த விழாவை வீட்டிலிருந்தபடியே டிவியில் லைவ்வாக ஒளிபரப்பப்பட்டதை
கலைஞர் பார்த்து மகிழ்ந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கடந்த ஒன்றரை
ஆண்டுகளாக எந்த விழாக்களுக்கும் கலைஞர் நேரில் செல்வதில்லை.
அவர் விரைவில் பேசுவார் என்று இந்த தமிழகமே எதிர்பார்க்கிறது. எனவே
விரைவில் உடன்பிறப்புகளே என்ற குரல் எல்லா திசைகளிலும் ஒலிக்கும். முன்னதாக
ஸ்டாலின் நேற்று பேசும்போது கலைஞர் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக்
கூறிவிட்டு நான் ஸ்டாலின் பேசுகிறேன்... கேட்கிறதா என சில நிமிடங்கள்
உருக்கமாக பேசினார்.
tamil.oneindia.com
tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக