இலங்கையின் EAP குழுமத்தைச் சேர்ந்த பிரபல்யமான சொத்துக்களை ஈழத்தமிழரான அல்லிராஜா சுபாஷ்கரனின் நிறுவனமான லைக்கா வாங்குகின்றது.
இலங்கையின் முல்லைத்தீவைச் சேர்ந்த
அல்லிராஜா சுபாஷ்கரன் இன்று பிரித்தானியாவில் தொலைத்தொடர்புத் துறையில்
முன்னணி வகித்துவருகின்றார். இவரது லைக்கா நிறூவனம் உலகில் சுமார் 25க்கும்
மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது. கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம்
ட்ராவல்ஸ், பணப்பரிமாற்றம், ஐபி தொலைக்காட்சி, ஊடகம், இந்திய சினிமா என
தனது முதலீடுகளை விரிவாக்கம் செய்து வெற்றிகரமாக நடாத்திவருகின்றது.
சங்கர் இயக்கத்தில் ரஜனிகாந்த் மற்றும் ஏ
ஆர் ரகுமான் கூட்டணியில் இவரது நிறுவனம் தயாரிக்கும் 2.0 திரைப்படத்திற்கு
சுமார் இந்திய பணமதிப்பில் 450 கோடிகளை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம்
இவரது லைகா நிறுவனம் இந்தியாவில் தேசிய அளவில் பேசப்பட்டு வருகின்றது.
தற்போது முதலீடு செய்யப்படுகின்ற EAP
குழுமத்தின் மூலம் இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி, வானொலி, திரையரங்குகள்
மற்றும் ஹோட்டல்கள் என அணைத்தும் லைகா நிறுவனத்தின் கீழ் வர இருக்கின்றது. www.quicknewstamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக